கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்சத்தமும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே.
பாடல் 1634 — உரைVerse 1634 — meaning
மாயை நீங்கிய உண்மையை அறிந்து மனம் அமைதி அடைந்துவிட்டால், மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லிச் செபிக்க வேண்டியதில்லை. சமாதி நிலையை அடைந்துவிட்டால், மனத்தில் எந்த விதமான எண்ணங்களும் இருக்காது. உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் நிற்கின்ற நிலையை அடைந்துவிட்டால், வெளிப்புறச் சுத்தங்கள் எதுவும் தேவையில்லை. செயலே இல்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்துவிட்டால், சிந்தனை செய்வதற்கு எதுவுமே தேவையிராது.
If one knows the truth from which illusion has departed and the mind comes to rest, there is no need to recite mantras, whether silently or aloud. If the state of samadhi is reached, there will be no thoughts of any kind in the mind. If one reaches the state of standing without any impurity within, no outward cleansings are needed. And if one reaches the state of being wholly without action, nothing at all remains to be thought about.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மாயை நீங்கிய உண்மையை அறிந்து மனம் அமைதி அடைந்துவிட்டால், மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லிச் செபிக்க வேண்டியதில்லை.
If one knows the truth from which illusion has departed and the mind comes to rest, there is no need to recite mantras, whether silently or aloud.
- வரி 2Line 2
சமாதி நிலையை அடைந்துவிட்டால், மனத்தில் எந்த விதமான எண்ணங்களும் இருக்காது.
If the state of samadhi is reached, there will be no thoughts of any kind in the mind.
- வரி 3Line 3
உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் நிற்கின்ற நிலையை அடைந்துவிட்டால், வெளிப்புறச் சுத்தங்கள் எதுவும் தேவையில்லை.
If one reaches the state of standing without any impurity within, no outward cleansings are needed.
- வரி 4Line 4
செயலே இல்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்துவிட்டால், சிந்தனை செய்வதற்கு எதுவுமே தேவையிராது.
And if one reaches the state of being wholly without action, nothing at all remains to be thought about.




