திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1637

ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

மனத்துறை மாக்கட லேழுங்கை நீங்கித்தவத்திடை யாளர்தஞ் சர்வத்து வந்தார்பவத்திடை யாளரவர் பணி கேட்கில்முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

உரை

மனத்தில் வீற்றிருக்கின்ற மாபெரும் கடலாகிய ஏழு விதமான மாயைகளாகிய குற்றங்களும் நீங்கிப் போகும்படி, தாம் செய்கின்ற தவத்தில் தகுதி பெற்றவர்கள், தமது தவத்தில் முழுமை பெற்று வந்தார்கள். வாழ்க்கையின் நடுவில் சிக்கிக்கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள், அவ்வாறு வந்தவர்களிடம் அவர்கள் செய்த தொண்டு என்ன விதம் என்பதைக் கேட்டுத் தெளிந்து, அதைக் கடைப்பிடித்துத் தாமும் தவம் புரிந்தால், தங்களின் முகத்தின் நடுவிலேயே குருநாதராகிய இறைவனைத் தரிசிக்கும் நிலையைப் பெறுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    மனத்தில் வீற்றிருக்கின்ற மாபெரும் கடலாகிய ஏழு விதமான மாயைகளாகிய குற்றங்களும் நீங்கிப் போகும்படி,

  • வரி 2

    தாம் செய்கின்ற தவத்தில் தகுதி பெற்றவர்கள், தமது தவத்தில் முழுமை பெற்று வந்தார்கள்.

  • வரி 3

    வாழ்க்கையின் நடுவில் சிக்கிக்கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள், அவ்வாறு வந்தவர்களிடம் அவர்கள் செய்த தொண்டு என்ன விதம் என்பதைக் கேட்டுத் தெளிந்து, அதைக் கடைப்பிடித்துத் தாமும் தவம் புரிந்தால்,

  • வரி 4

    தங்களின் முகத்தின் நடுவிலேயே குருநாதராகிய இறைவனைத் தரிசிக்கும் நிலையைப் பெறுவார்கள்.

திருமந்திரம் பாடல் #1637

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout