திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1644

ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவாற்சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோ ரறவுண்டாற்சித்தஞ் சிவமாகவே சித்தி முத்தியாஞ்சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.

உரை

அறிவு சிவமாகவே ஆகுவதற்கு, உடலால் செய்கின்ற தவ வழிமுறைகள் எதுவும் வேண்டியதில்லை; ஆதலால், அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும். இவ்வாறு இறைவனை எண்ணிக்கொண்டு இருப்பதனால் அறிவு சிவமாகிப் பேரின்பத்தை அடைந்தவர்கள், அனைத்தையும் விட்டு விலகி இருந்ததனாலேயே அதை அடைந்தார்கள். அதன் விளைவாக அறிவு சிவமாகவே ஆகிவிடும்போது, அதனால் கிடைக்கின்ற இறை அருளே முக்தியாகவும் இருக்கின்றது. இவ்வாறு அறிவு சிவமாகவே ஆகுவது, இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டே இருக்கின்ற தவத்தின் பலனால் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அறிவு சிவமாகவே ஆகுவதற்கு, உடலால் செய்கின்ற தவ வழிமுறைகள் எதுவும் வேண்டியதில்லை; ஆதலால், அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும்.

  • வரி 2

    இவ்வாறு இறைவனை எண்ணிக்கொண்டு இருப்பதனால் அறிவு சிவமாகிப் பேரின்பத்தை அடைந்தவர்கள், அனைத்தையும் விட்டு விலகி இருந்ததனாலேயே அதை அடைந்தார்கள்.

  • வரி 3

    அதன் விளைவாக அறிவு சிவமாகவே ஆகிவிடும்போது, அதனால் கிடைக்கின்ற இறை அருளே முக்தியாகவும் இருக்கின்றது.

  • வரி 4

    இவ்வாறு அறிவு சிவமாகவே ஆகுவது, இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டே இருக்கின்ற தவத்தின் பலனால் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1644

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout