தொடர்ந்து படிக்கread this section continuously
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பதுபத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழமுத்தி கொடுக்கு முனிவ னெனும்பதஞ்சத்தான செய்வது தான்றவந் தானே.
உரைmeaning
தம்முடைய பக்குவத்திற்கு இணையாகக் கூடவே இருந்தாலும், பேரான்மாவாக மிகுந்து தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின் புகழ்களைத் தாம் போற்றி உரைப்பது, பக்தியைக் கொடுக்கும். அதனுடன் பணிவும் சேர்ந்து அடியவர்கள் இறைவனைத் தொழும்போது, முனிவன் என்கின்ற பக்குவத்தில் தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு சிறப்பாகச் செய்வது, முக்தியைக் கொடுப்பதற்குக் காரணமாகிய தவத்தைத் தானாகவே கொடுக்கும்.
God stands together with us, matching the ripeness we have reached, and yet stands beyond it as the great soul. To praise and speak his glories gives devotion. And when humility joins with that and the devotees worship him, then to carry out well, together with the divine power, the discipline one practises in the ripeness called that of the muni, itself gives the austerity that is the cause of release.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தம்முடைய பக்குவத்திற்கு இணையாகக் கூடவே இருந்தாலும், பேரான்மாவாக மிகுந்து தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின் புகழ்களைத் தாம் போற்றி உரைப்பது,
God stands together with us, matching the ripeness we have reached, and yet stands beyond it as the great soul; and to praise and speak his glories
- வரி 2Line 2
பக்தியைக் கொடுக்கும்; அதனுடன் பணிவும் சேர்ந்து அடியவர்கள் இறைவனைத் தொழும்போது,
gives devotion; and when humility joins with that and the devotees worship him,
- வரி 3Line 3
முனிவன் என்கின்ற பக்குவத்தில் தாம் செய்கின்ற சாதகம், முக்தியைக் கொடுப்பதற்குக் காரணமாக அமைகின்றது.
the discipline one practises in the ripeness called that of the muni becomes the cause of the giving of release.
- வரி 4Line 4
அந்தச் சாதகத்தை இறை சக்தியோடு சிறப்பாகச் செய்வது, அந்த முக்திக்குக் காரணமாகிய தவத்தைத் தானாகவே கொடுக்கும்.
To carry out that discipline well, together with the divine power, itself gives the austerity that is the cause of that release.
திருமந்திரம் பாடல் #1639
1 / 2





