தொடர்ந்து படிக்கread this section continuously
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக் கென்றெண்ணிமலர்தொட்டுக் கண்டேன் வரும்பலன் காணென்றலைகெட்ட நூல்கண்டு தாழ்ந்தேனென் னுள்ளந்தலைதொட்டுக் கண்டேன் றவங்கண்ட வாறே.
உரைmeaning
பூச்செடிகளில் உள்ள இலைகளைத் தொட்டு, அதில் மலர்ந்திருக்கின்ற பூக்களைப் பறித்தெடுத்து, எமது தந்தையாகிய இறைவனுக்குச் சாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, மலர்களைக் கோர்த்து மாலையாக்கிச் சாற்றி, அதனால் கிடைக்கின்ற பலனைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். எந்தப் பலனும் கிடைக்காதபோது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், உண்மை இல்லாத தவறான கருத்துக்களைச் சொல்லுகின்ற நூல்களில் உள்ளதைக் கண்டு, அதன்படிச் செய்து இப்படித் தாழ்ந்துவிட்டேன் என்று உணர்ந்துகொண்டேன். அப்போது, எனது உள்ளத்திற்குள்ளே வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால், தலை உச்சியில் இருக்கின்ற பேரொளியாகிய இறை சக்தியைத் தொட்டு அடைந்து, தவத்தைக் காணுகின்ற வழிமுறை இதுவே என்று கண்டு உணர்ந்துகொண்டேன்.
Touching the leaves on the flowering plants, plucking the blossoms that had opened on them, thinking that they must be offered to God my father, I strung the flowers into a garland and offered it, and waited expecting to see the fruit that would come of it. When no fruit came at all and I looked into why, I understood that I had seen what stood in books that speak wrong opinions with no truth in them, had acted according to them, and had sunk low in this way. Then, by the grace of God who is seated within my own heart, I touched and reached the divine power that is the great light at the crown of the head, and I saw and understood that this itself is the way in which austerity is seen.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பூச்செடிகளில் உள்ள இலைகளைத் தொட்டு, அதில் மலர்ந்திருக்கின்ற பூக்களைப் பறித்தெடுத்து, எமது தந்தையாகிய இறைவனுக்குச் சாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு,
Touching the leaves on the flowering plants, plucking the blossoms that had opened on them, thinking that they must be offered to God my father,
- வரி 2Line 2
மலர்களைக் கோர்த்து மாலையாக்கிச் சாற்றி, அதனால் கிடைக்கின்ற பலனைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்.
I strung the flowers into a garland and offered it, and waited expecting to see the fruit that would come of it.
- வரி 3Line 3
எந்தப் பலனும் கிடைக்காதபோது ஏன் என்று ஆராய்ந்தால், உண்மை இல்லாத தவறான கருத்துக்களைச் சொல்லுகின்ற நூல்களில் உள்ளதைக் கண்டு, அதன்படிச் செய்து இப்படித் தாழ்ந்துவிட்டேன் என்று உணர்ந்துகொண்டேன்.
When no fruit came and I looked into why, I understood that I had seen what stood in books that speak wrong opinions with no truth in them, had acted according to them, and had sunk low in this way.
- வரி 4Line 4
அப்போது, எனது உள்ளத்திற்குள்ளே வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால், தலை உச்சியில் இருக்கின்ற பேரொளியாகிய இறை சக்தியைத் தொட்டு அடைந்து, தவத்தைக் காணுகின்ற வழிமுறை இதுவே என்று உணர்ந்துகொண்டேன்.
Then, by the grace of God seated within my own heart, I touched and reached the divine power that is the great light at the crown of the head, and I understood that this itself is the way in which austerity is seen.
திருமந்திரம் பாடல் #1640
1 / 2





