பிரானரு ளுண்டெனி லுண்டுநற் செல்வம்பிரானரு ளுண்டெனி லுண்டுநல் ஞானம்பிரானரு ளிற்பெருந் தன்மையு முண்டுபிரானரு ளாற்பெருந் தெய்வமு மாமே.
பாடல் 1645 — உரைVerse 1645 — meaning
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருள் ஒருவருக்கு இருக்கின்றது என்றால், அவருக்குத் தருமத்தினால் வருகின்ற அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். இறைவனின் திருவருள் ஒருவருக்கு இருக்கின்றது என்றால், உண்மை அறிவாகிய பேரறிவு ஞானமும் அவருக்குக் கிடைக்கும். இறைவனின் திருவருளில் ஞானம் கிடைக்கப் பெற்ற அவருக்கு, இந்தப் பிறவியிலேயே மாபெரும் இறைத் தன்மையும் கிடைக்கும். அதன் பிறகு, பிறவி இல்லாத நிலையில், இறைவனின் திருவருளால் மாபெரும் தெய்வமாகவே அவரும் ஆகிவிடுவார்.
If the grace of God who is lord of all is with someone, all the kinds of wealth that come through dharma will be theirs. If the grace of God is with someone, the great wisdom that is true knowing will be theirs as well. To the one who has received wisdom in the grace of God, the great nature of God itself comes in this very birth. And after that, in the state where there is no more birth, by his grace that one too becomes the great deity.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருள் ஒருவருக்கு இருக்கின்றது என்றால், அவருக்குத் தருமத்தினால் வருகின்ற அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
If the grace of God who is lord of all is with someone, all the kinds of wealth that come through dharma will be theirs.
- வரி 2Line 2
இறைவனின் திருவருள் ஒருவருக்கு இருக்கின்றது என்றால், உண்மை அறிவாகிய பேரறிவு ஞானமும் அவருக்குக் கிடைக்கும்.
If the grace of God is with someone, the great wisdom that is true knowing will be theirs as well.
- வரி 3Line 3
இறைவனின் திருவருளில் ஞானம் கிடைக்கப் பெற்ற அவருக்கு, இந்தப் பிறவியிலேயே மாபெரும் இறைத் தன்மையும் கிடைக்கும்.
To the one who has received wisdom in the grace of God, the great nature of God itself comes in this very birth.
- வரி 4Line 4
அதன் பிறகு, பிறவி இல்லாத நிலையில், இறைவனின் திருவருளால் மாபெரும் தெய்வமாகவே அவரும் ஆகிவிடுவார்.
And after that, in the state where there is no more birth, by his grace that one too becomes the great deity.




