திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1646

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தமிழ்மண் டலமைந்துந் தவ்விய ஞானமுழவது போல வுலகர் திரிவரவிழு மனமு மெமாதி யறிவுந்தமிழ்மண் டலமைந்துந் தத்துவ மாமே.

உரை

ஆதி மொழியாகிய தமிழிலிருந்து உருவாகியிருக்கின்ற அனைத்து விதமான மொழிகளின் மூலமும், உலகத்தில் ஐந்து விதமான பூதங்களால் ஆகிய அனைத்துப் பொருள்களின் மூலமும், அறிந்துகொள்ள வேண்டிய ஞானத்தையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று, நிலத்தை உழுது பண்படுத்திப் பயிர் வளர்ப்பது போலவே உலகத்தில் உள்ளவர்கள் அலைந்து திரிந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால், உலகத்தில் உள்ள ஆசைகளும் பற்றுக்களும் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற மனமானது, எமது ஆதி முதல்வனாகிய இறைவனின் அறிவு வடிவத்தைப் பெறும். அவனது திருவருளால், அனைத்து மொழிகளினாலும் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களினாலும் அறியக்கூடிய அனைத்து விதமான ஞானத்தையும் அது ஒருவருக்குக் கொடுத்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆதி மொழியாகிய தமிழிலிருந்து உருவாகியிருக்கின்ற அனைத்து மொழிகளின் மூலமும், ஐந்து விதமான பூதங்களால் ஆகிய அனைத்துப் பொருள்களின் மூலமும், அறிந்துகொள்ள வேண்டிய ஞானத்தையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று,

  • வரி 2

    நிலத்தை உழுது பண்படுத்திப் பயிர் வளர்ப்பது போலவே உலகத்தில் உள்ளவர்கள் அலைந்து திரிந்து முயற்சி செய்கிறார்கள்.

  • வரி 3

    ஆனால், உலகத்தில் உள்ள ஆசைகளும் பற்றுக்களும் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற மனமானது, எமது ஆதி முதல்வனாகிய இறைவனின் அறிவு வடிவத்தைப் பெறும்.

  • வரி 4

    அவனது திருவருளால், அனைத்து மொழிகளினாலும் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களினாலும் அறியக்கூடிய அனைத்து விதமான ஞானத்தையும் அது ஒருவருக்குக் கொடுத்துவிடும்.

திருமந்திரம் பாடல் #1646

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout