திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1651

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்டமாயத்தே ரேறி மயங்கு மவையுணர்நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றாலாயத்தே ரேறி யவனிவ னாமே.

உரை

உயிர்கள் நிலையில்லாத தமது உடலை, இறப்பு இல்லாத நிலை பெற்ற உயர்ந்த தேராக மாற்றி அதில் ஏறிச் செல்வதற்கு, மனமாகிய பாகனின் கையில் ஐம்புலன்களும் அவன் வசப்படும்படிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், மாயையின் மயக்கத்திலிருந்து நீங்கி, உண்மை அறிவாகிய தேரில் ஏறி, மாயையினால் மயங்குகின்ற மனத்தை மாற்றி உண்மையை உணர வைக்கலாம். அதன் பிறகு, அன்பு என்கின்ற நிலையிலிருந்து பேரன்பாகவே மாறுகின்ற தேரில் ஏறினால், ஒரு குற்றமும் இல்லாத இறைவனின் திருவருளைப் பெற்றுவிடலாம். அப்போது, பொன்னாகவே மாறிவிட்ட தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில் ஏறினால், இறைவனே தாம் எனும் நிலையை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் நிலையில்லாத தமது உடலை, இறப்பு இல்லாத நிலை பெற்ற உயர்ந்த தேராக மாற்றி அதில் ஏறிச் செல்வதற்கு, மனமாகிய பாகனின் கையில் ஐம்புலன்களும் அவன் வசப்படும்படிச் செய்ய வேண்டும்.

  • வரி 2

    அவ்வாறு செய்தால், மாயையின் மயக்கத்திலிருந்து நீங்கி, உண்மை அறிவாகிய தேரில் ஏறி, மாயையினால் மயங்குகின்ற மனத்தை மாற்றி உண்மையை உணர வைக்கலாம்.

  • வரி 3

    அதன் பிறகு, அன்பு என்கின்ற நிலையிலிருந்து பேரன்பாகவே மாறுகின்ற தேரில் ஏறினால், ஒரு குற்றமும் இல்லாத இறைவனின் திருவருளைப் பெற்றுவிடலாம்.

  • வரி 4

    அப்போது, பொன்னாகவே மாறிவிட்ட தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில் ஏறினால், இறைவனே தாம் எனும் நிலையை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #1651

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout