தொடர்ந்து படிக்கread this section continuously
அவ்வுல கத்தே பிறக்கி லுடலோடுமவ்வுல கத்தே யருந்தவம் நாடுவரவ்வுல கத்தே யரனடி கூடுவரவ்வுல கத்தே யருள்பெறு வாரே.
உரைmeaning
இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த உலகத்தில் பிறவி எடுத்தாலும், அந்த உலகத்திற்கு ஏற்ற உடம்போடு பிறப்பார்கள். அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே, செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களைத் தேடி அடைந்து செய்கின்ற தவசிகளாக இருப்பார்கள். அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனின் திருவடியைச் சேர்ந்திருப்பார்கள். அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனது திருவருளையும் பெற்றுவிடுவார்கள்.
Whatever world they take birth in, if they are born with the thought that they must reach God, they are born with a body suited to that world. In the very world they are in, they become ascetics who seek out and take up austerities that are very hard to perform. In the very world they are in, they join the feet of God. And in the very world they are in, they receive his grace as well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த உலகத்தில் பிறவி எடுத்தாலும், அந்த உலகத்திற்கு ஏற்ற உடம்போடு பிறப்பார்கள்.
Whatever world they take birth in, if they are born with the thought that they must reach God, they are born with a body suited to that world.
- வரி 2Line 2
அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே, செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களைத் தேடி அடைந்து செய்கின்ற தவசிகளாக இருப்பார்கள்.
In the very world they are in, they become ascetics who seek out and take up austerities that are very hard to perform.
- வரி 3Line 3
அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனின் திருவடியைச் சேர்ந்திருப்பார்கள்.
In the very world they are in, they join the feet of God.
- வரி 4Line 4
அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனது திருவருளையும் பெற்றுவிடுவார்கள்.
And in the very world they are in, they receive his grace as well.
திருமந்திரம் பாடல் #1652
1 / 2





