தொடர்ந்து படிக்கread this section continuously
கதிர்கொண்ட காந்தங் கனலின் வடிவாமதிகண்ட காந்த மணிநீர் வடிவாஞ்சதிகொண்டு தாக்கி யெரியின் வடிவாமெரிகொண்ட வீசனெ ழில்வடி வாமே.
உரைmeaning
இறையருள் பெற்று, பொன் போன்ற பிரகாசமான உடலைக் கொண்டு, தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள், வெப்பத்தின் வடிவமாக இருக்கின்றார்கள். இறையருளால் உண்மை ஞானத்தைக் கண்டுகொண்டு, தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள், இரசமணியின் நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போலத் தங்களை நாடி வந்த மற்றவர்களுக்கும் ஞானத்தைத் தருகின்ற ஞான வடிவமாக இருக்கின்றார்கள். தம்மைச் சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியைக் கொண்டு, அவற்றைத் தாக்கி எரித்து நெருப்பின் வடிவமாக ஆக்கிவிடுவதே, தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக் கொண்டிருக்கின்ற இறைவனின் பேரழகு வடிவத்தின் தத்துவம் ஆகும்.
The wise who have received divine grace, who bear a shining body like gold and who draw others towards themselves, are heat in form. The wise who by divine grace have seen true wisdom and who draw others towards themselves are wisdom in form, giving wisdom to those who come seeking them, in the way that the water of the alchemist's stone turns even iron into gold. And to hold the design of how the deeds of the devotees who take refuge in him are to be destroyed, and to strike those deeds and burn them and make them into the form of fire, is the philosophy of the beautiful form of God, who bears the vessel of fire in his left hand.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறையருள் பெற்று, பொன் போன்ற பிரகாசமான உடலைக் கொண்டு, தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள், வெப்பத்தின் வடிவமாக இருக்கின்றார்கள்.
The wise who have received divine grace, who bear a shining body like gold and who draw others towards themselves, are heat in form.
- வரி 2Line 2
இறையருளால் உண்மை ஞானத்தைக் கண்டுகொண்டு மற்றவர்களை ஈர்க்கின்ற ஞானிகள், இரசமணியின் நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போலத் தங்களை நாடி வந்தவர்களுக்கும் ஞானத்தைத் தருகின்ற ஞான வடிவமாக இருக்கின்றார்கள்.
The wise who by divine grace have seen true wisdom and who draw others are wisdom in form, giving wisdom to those who come seeking them, in the way that the water of the alchemist's stone turns even iron into gold.
- வரி 3Line 3
தம்மைச் சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியைக் கொண்டு, அவற்றைத் தாக்கி எரித்து நெருப்பின் வடிவமாக ஆக்கிவிடுகின்றான்.
Holding the design of how the deeds of the devotees who take refuge in him are to be destroyed, he strikes those deeds and burns them and makes them into the form of fire.
- வரி 4Line 4
அதுவே, தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக் கொண்டிருக்கின்ற இறைவனின் பேரழகு வடிவத்தின் தத்துவம் ஆகும்.
That is the philosophy of the beautiful form of God, who bears the vessel of fire in his left hand.
திருமந்திரம் பாடல் #1653
1 / 2





