தொடர்ந்து படிக்கread this section continuously
புண்ணிய னெந்தை புனித னிணையடிநண்ணி விளக்கென்ன ஞானம் விளைந்ததுமண்ணவ ராவதும் வானவ ராவதுமண்ண லிறைவனருள் பெற்ற போதே.
உரைmeaning
புண்ணியமே வடிவாகிய எமது தந்தையும் புனிதனுமாகிய இறைவனின் இணையில்லாத திருவடிகளைத் தேடி அடைந்து, உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே என்று கேட்டுக்கொள்ள, அவரது திருவருளால் ஞானம் எமக்குள் விளைந்தது. அப்படி அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருளால் ஞானம் விளைந்தபோதே, தெய்வங்களுக்குச் சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள் ஆவதும், வானுலகத்திற்குச் சென்று தேவர்கள் ஆவதும் முடியும்.
Searching for and reaching the incomparable feet of God, our father and the pure one, who is merit itself in form, I asked him, father, explain true wisdom to me. And by his grace wisdom grew within me. It is at that very moment, when wisdom grows by the grace of God the lord of all, that becoming one of the deathless ones who stand equal to the deities here in this world, and going to the world above and becoming one of the celestials, are both possible.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
புண்ணியமே வடிவாகிய எமது தந்தையும் புனிதனுமாகிய இறைவனின் இணையில்லாத திருவடிகளை,
The incomparable feet of God, our father and the pure one, who is merit itself in form,
- வரி 2Line 2
தேடி அடைந்து, உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே என்று கேட்டுக்கொள்ள, அவரது திருவருளால் ஞானம் எமக்குள் விளைந்தது.
I searched for and reached, and I asked him, father, explain true wisdom to me; and by his grace wisdom grew within me.
- வரி 3Line 3
தெய்வங்களுக்குச் சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள் ஆவதும், வானுலகத்திற்குச் சென்று தேவர்கள் ஆவதும்,
Becoming one of the deathless ones who stand equal to the deities here in this world, and going to the world above and becoming one of the celestials,
- வரி 4Line 4
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருளால் ஞானம் விளைந்தபோதே முடியும்.
are both possible at that very moment when wisdom grows by the grace of God the lord of all.
திருமந்திரம் பாடல் #1650
1 / 2





