திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1649

ஆறாம் தந்திரம்7. அருளுடைமையின் ஞானம் வருதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவனரு ளாற்சில தேவரு மாவர்சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்சிவனரு ளால்வினை சேர்கி லாரமைச்சிவனருள் கூறிற் சிவலோக மாமே.

உரை

இறைவனது திருவருளைச் சரியாகப் பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர், வானுலகத்துத் தேவர்களாகவும் ஆவார்கள். இறைவனது திருவருளைச் சரியாகப் பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர், தெய்வங்களுக்குச் சரிசமமாக விளங்குவார்கள். இறைவனது திருவருளினால், இனி எந்த விதமான வினையும் வந்து சேர்ந்துவிடாத தன்மையை அடைந்தவர்கள், தாம் பெற்ற இறைவனது திருவருளை எடுத்துக் கூறினால், அதுவே சிவலோகமாகவும் இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனது திருவருளைச் சரியாகப் பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர், வானுலகத்துத் தேவர்களாகவும் ஆவார்கள்.

  • வரி 2

    இறைவனது திருவருளைச் சரியாகப் பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர், தெய்வங்களுக்குச் சரிசமமாக விளங்குவார்கள்.

  • வரி 3

    இறைவனது திருவருளினால், இனி எந்த விதமான வினையும் வந்து சேர்ந்துவிடாத தன்மையை அடைந்தவர்கள் இருக்கின்றார்கள்.

  • வரி 4

    அவர்கள் தாம் பெற்ற இறைவனது திருவருளை எடுத்துக் கூறினால், அதுவே சிவலோகமாகவும் இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1649

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout