ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்வேடங் கள்கொண்டு வெருட்டிடும் பேதைகாளாடியும் பாடியும் மழுது மரற்றியுந்தேடியுங் காணீர் சிவனவன் றாள்களே.
ஆறாம் தந்திரம் பாடல் 1655–1660 (6 பாடல்கள்)
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடையீனம தேசெய் திரந்துண் டிருப்பினுமான நலங்கெடு மப்புவி யாதலாலீனவர் வேடங் கழிப்பித்த லின்பமே.
இன்பமுந் துன்பமு நாட்டா ரிடத்துள்ளநன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காமென்ப விறைநாடி நாடோறு நாட்டினில்மன்பதை செப்பஞ் செயில்வையம் வாழுமே.
இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்தவழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே.
பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாகமெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்பொய்வேட மெய்வேடம் போதவே பூணினுமுய்வேட மாகுமு ணர்ந்தறிந் தோர்க்கே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1655
1 / 6
0:000:00
8. அவ வேடம்பாடல் 1655




