தொடர்ந்து படிக்கread this section continuously
இன்பமுந் துன்பமு நாட்டா ரிடத்துள்ளநன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காமென்ப விறைநாடி நாடோறு நாட்டினில்மன்பதை செப்பஞ் செயில்வையம் வாழுமே.
உரைmeaning
ஒரு நாட்டில் உள்ளவர்கள் தாங்கள் இருக்கின்ற இடத்தில் செய்கின்ற நன்மையான செயல்களாலும் தீமையான செயல்களாலும்தான், அவர்கள் இருக்கின்ற அந்த நாட்டிற்கு இன்பம் வருவதும் துன்பம் வருவதும் நிகழ்கின்றது. ஆதலால் அதை விடுத்து, நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நாள்தோறும் இறைவனைத் தேடி, தங்களுடைய மனத்தைக் கெடுக்கின்ற விஷயங்களை நீக்கிச் செம்மையாக்குவதைச் செய்தால், உலகம் இன்பத்தோடு வாழும்.
It is by the good deeds and the bad deeds that the people of a country do in the place where they live that happiness and sorrow come to that country of theirs. Therefore, setting that aside, if all the people of the country seek God day after day, and remove the things that spoil their minds and make them upright, then the world will live in happiness.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இன்பம் வருவதும் துன்பம் வருவதும், ஒரு நாட்டில் உள்ளவர்கள் தாங்கள் இருக்கின்ற இடத்தில் செய்கின்ற செயல்களைப் பொறுத்ததாகும்.
Happiness coming and sorrow coming depend on what the people of a country do in the place where they live.
- வரி 2Line 2
அவர்களுடைய நன்மையான செயல்களாலும் தீமையான செயல்களாலும்தான் அவை அந்த நாட்டிற்கு நிகழ்கின்றன.
It is by their good deeds and their bad deeds that these come about for that country.
- வரி 3Line 3
ஆதலால் அதை விடுத்து, நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நாள்தோறும் இறைவனைத் தேடி,
Therefore, setting that aside, if all the people of the country seek God day after day,
- வரி 4Line 4
தங்களுடைய மனத்தைக் கெடுக்கின்ற விஷயங்களை நீக்கிச் செம்மையாக்குவார்களானால், உலகம் இன்பத்தோடு வாழும்.
and remove the things that spoil their minds and make them upright, then the world will live in happiness.
திருமந்திரம் பாடல் #1657
1 / 2





