தொடர்ந்து படிக்கread this section continuously
இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்தவழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
உரைmeaning
ஞான குருவின் வழியைப் பின்பற்றி வருகின்ற சீடர்களின் கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் உண்மையான வேடம் அணிவது, தேவர்கள் ஆகுவதற்காக ஆகும். ஆனால் இழிவான கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் பொய்யாக வேடம் அணிவது, அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியைப் பெறுவதற்காக ஆகும். ஆகவே, பொய்யான வேடத்தால் பழியைப் பெற்ற கூட்டத்தவராகிய இவர்கள், அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிய கொடுமையான மனிதர்களாக இருக்கின்றார்கள். எனவே தங்களுடைய வாழ்க்கையை வீணாகக் கழித்த அந்தக் கூட்டத்தவர்கள், உண்மையான வேடம் அணிந்த நல்லவர்களின் கூட்டத்திலிருந்து நீக்கிக் களையப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
Those who join the company of disciples who follow the way of a guru of wisdom wear the true garb, and they wear it in order to become devas. But those who join a base company wear a false garb, and they wear it in order to gain the false standing of being above everyone. And so these people, of the company that has earned blame by its false garb, are cruel men who have laid waste the lives of others. Those of that company, who have spent their own lives for nothing, are removed and weeded out from the company of the good who wear the true garb.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இழிவான கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் பொய்யாக வேடம் அணிவது, அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியைப் பெறுவதற்கு ஆகும்.
Those who join a base company wear a false garb in order to gain the false standing of being above everyone.
- வரி 2Line 2
ஞான குருவின் வழியைப் பின்பற்றி வருகின்ற சீடர்களின் கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் உண்மையான வேடம் அணிவது, தேவர்கள் ஆகுவதற்கு ஆகும்.
Those who join the company of disciples who follow the way of a guru of wisdom wear the true garb in order to become devas.
- வரி 3Line 3
பொய்யான வேடத்தால் பழியைப் பெற்ற கூட்டத்தவராகிய இவர்கள், அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிய கொடுமையான மனிதர்களாக இருக்கின்றார்கள்.
These people, of the company that has earned blame by its false garb, are cruel men who have laid waste the lives of others.
- வரி 4Line 4
தங்களுடைய வாழ்க்கையை வீணாகக் கழித்த அந்தக் கூட்டத்தவர்கள், உண்மையான வேடம் அணிந்த நல்லவர்களின் கூட்டத்திலிருந்து நீக்கிக் களையப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
Those of that company, who have spent their own lives for nothing, are removed and weeded out from the company of the good who wear the true garb.
திருமந்திரம் பாடல் #1658
1 / 2





