திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1659

தொடர்ந்து படிக்கread this section continuously

பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே.

உரை

உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான தவத்தைச் செய்பவர்கள், இறந்த பிறகு நரகத்திற்கே சென்று அடைவார்கள். பொய்யான தவத்தைச் செய்தவர்கள் பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால், புண்ணியம் பெற்றவர்களாக ஆக மாட்டார்கள். ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான தவமாக இருந்தாலும், உலகத்தில் வினைகளைக் கொடுக்கின்ற ஆசைகளைத் தமக்குள்ளிருந்து நீக்கிவிட்டு, அதன் பயனால் கிடைக்கின்ற உண்மையான ஞானத்தால் உறுதியாகத் தாங்கப்பட்டு இருப்பதே உண்மையான தவங்கள் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான தவத்தைச் செய்பவர்கள், இறந்த பிறகு நரகத்திற்கே சென்று அடைவார்கள்.

  • வரி 2

    பொய்யான தவத்தைச் செய்தவர்கள் பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால், புண்ணியம் பெற்றவர்களாக ஆக மாட்டார்கள்.

  • வரி 3

    ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான தவமாக இருந்தாலும், உலகத்தில் வினைகளைக் கொடுக்கின்ற ஆசைகளைத் தமக்குள்ளிருந்து நீக்கிவிட வேண்டும்.

  • வரி 4

    அதன் பயனால் கிடைக்கின்ற உண்மையான ஞானத்தால் உறுதியாகத் தாங்கப்பட்டு இருப்பதே உண்மையான தவங்கள் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1659

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout