திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1656

தொடர்ந்து படிக்கread this section continuously

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடையீனம தேசெய் திரந்துண் டிருப்பினுமான நலங்கெடு மப்புவி யாதலாலீனவர் வேடங் கழிப்பித்த லின்பமே.

உரை

உண்மையான ஞானம் இல்லாதவர்கள், தவசிகள் போல வேடம் அணிந்துகொண்டு, அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு நடுவிலேயே திரிந்துகொண்டு, இழிவான செயல்களையே செய்துகொண்டு, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அவர்களின் செயலால் அந்த நாட்டிற்கு அவமானமும் நன்மைக் கேடும் உண்டாகும். அவர்கள் இருக்கின்ற நாடு இந்தப் பூமியில் இருப்பதால், உலகம் அனைத்திற்குமே கேடு நடக்கும். ஆகவே, இழிவான அவர்களின் வேடத்தை நீக்கி, அவர்களை உண்மையை உணரச் செய்து, அதன் பயனால் உலகம் இன்பம் அடையும்படிச் செய்வது, உண்மை ஞானிகளின் கடமையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான ஞானம் இல்லாதவர்கள், தவசிகள் போல வேடம் அணிந்துகொண்டு, அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு நடுவிலேயே திரிந்துகொண்டு,

  • வரி 2

    இழிவான செயல்களையே செய்துகொண்டு, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும்,

  • வரி 3

    அவர்களின் செயலால் அந்த நாட்டிற்கு அவமானமும் நன்மைக் கேடும் உண்டாகும்; அவர்கள் இருக்கின்ற நாடு இந்தப் பூமியில் இருப்பதால், உலகம் அனைத்திற்குமே கேடு நடக்கும்.

  • வரி 4

    ஆகவே, இழிவான அவர்களின் வேடத்தை நீக்கி, அவர்களை உண்மையை உணரச் செய்து, அதன் பயனால் உலகம் இன்பம் அடையும்படிச் செய்வது, உண்மை ஞானிகளின் கடமையாகும்.

திருமந்திரம் பாடல் #1656

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout