திருமூலர் அருளிய திருமந்திரம்
9. தவ வேடம்

ஆறாம் தந்திரம் பாடல் 1661–1665 (5 பாடல்கள்)

தவமிக் கவரே தலையான வேடரவமிக் கவரே யதிகொலை வேடரவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.

பூதி யணிவது சாதன மாதியிற்காதணி தாம்பிரங் குண்டலங் கண்டிகையோதி யவர்க்கு முருத்திர சாதனந்தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளிதோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையொன்றுவாகத்து நீறணி யாங்கக் கப்பாளஞ்சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

காதணி குண்டலங் கண்டிகை நாகமுமூதின சங்கு முயர்கட்டிக் கப்பரையேதமில் பாதுகம் யோகாந்த மாதனமேதமில் யோகவட்டந் தண்டமீ ரைந்தே.

நூலுஞ் சிகையு முணரார்நின் மூடர்கள்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்பாலொன்று மந்தணர் பாப்பார் பரமுயிரோரொன் றிரண்டெனி லோங்கார மோதிலே.

திருமந்திரம் பாடல் #1661

1 / 5

0:000:00
9. தவ வேடம்பாடல் 1661

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout