திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1665

தொடர்ந்து படிக்கread this section continuously

நூலுஞ் சிகையு முணரார்நின் மூடர்கள்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்பாலொன்று மந்தணர் பாப்பார் பரமுயிரோரொன் றிரண்டெனி லோங்கார மோதிலே.

உரை

பூணூலுக்கும் குடுமிக்கும் உள்ள உட்பொருளை உணராதவர்கள் முழு மூடர்களாக இருக்கின்றார்கள். பூணூல் என்பது வேதத்தை முழுவதும் அறிந்து உணர்ந்ததைக் குறிப்பதாகும். தலை உச்சியில் இருக்கும் குடுமி என்பது உண்மை ஞானத்தை உணர்ந்ததைக் குறிப்பதாகும். வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு ஒன்றி இருக்கின்ற அந்தணர்களே, பரம்பொருளாகிய இறைவனே தமது உயிராகவும் இருப்பதைத் தமக்குள் பார்க்கின்றார்கள். ஒன்றுபட்டு இருக்கின்ற இறைவனும் ஆன்மாவும் ஆகிய இரண்டும் ஒரே பொருளே என்பதை, ஓங்காரத்தை ஓதியே அவர்கள் உணர்ந்தார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பூணூலுக்கும் குடுமிக்கும் உள்ள உட்பொருளை உணராதவர்கள் முழு மூடர்களாக இருக்கின்றார்கள்.

  • வரி 2

    பூணூல் என்பது வேதத்தை முழுவதும் அறிந்து உணர்ந்ததைக் குறிப்பதாகும்; தலை உச்சியில் இருக்கும் குடுமி என்பது உண்மை ஞானத்தை உணர்ந்ததைக் குறிப்பதாகும்.

  • வரி 3

    வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு ஒன்றி இருக்கின்ற அந்தணர்களே, பரம்பொருளாகிய இறைவனே தமது உயிராகவும் இருப்பதைத் தமக்குள் பார்க்கின்றார்கள்.

  • வரி 4

    ஒன்றுபட்டு இருக்கின்ற இறைவனும் ஆன்மாவும் ஆகிய இரண்டும் ஒரே பொருளே என்பதை, ஓங்காரத்தை ஓதியே அவர்கள் உணர்ந்தார்கள்.

திருமந்திரம் பாடல் #1665

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout