திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1666

ஆறாம் தந்திரம்10. திருநீறு

தொடர்ந்து படிக்கread this section continuously

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றைமங்காமற் பூசி மகிழ்வரே யாமாகிற்றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவநெறிசிங்கார மான திருவடி சேர்வரே.

உரை

உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன் தனது உடலில் பூசுகின்ற, சாம்பல் கவசமாகிய திருநீற்றைக் கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும்படி பூசிக் கொண்டு மகிழ்ச்சியை அடைபவர்களாகத் தாங்கள் இருந்தால், அனைத்து வினைகளும் அவர்களிடம் தங்காமல் விலகி ஓடிவிடும். சிவப் பரம்பொருளை அடைகின்ற வழிமுறை அவர்களுடன் சேர்ந்தே இருக்கும். அதன் வழியே சென்று, பேரழகாக இருக்கின்ற இறைவனின் திருவடியை அவர்கள் சென்று அடைவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன் தனது உடலில் பூசுகின்ற, சாம்பல் கவசமாகிய திருநீற்றை,

  • வரி 2

    கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும்படி பூசிக் கொண்டு மகிழ்ச்சியை அடைபவர்களாகத் தாங்கள் இருந்தால்,

  • வரி 3

    அனைத்து வினைகளும் அவர்களிடம் தங்காமல் விலகி ஓடிவிடும்; சிவப் பரம்பொருளை அடைகின்ற வழிமுறை அவர்களுடன் சேர்ந்தே இருக்கும்.

  • வரி 4

    அதன் வழியே சென்று, பேரழகாக இருக்கின்ற இறைவனின் திருவடியை அவர்கள் சென்று அடைவார்கள்.

திருமந்திரம் பாடல் #1666

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout