திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1664

தொடர்ந்து படிக்கread this section continuously

காதணி குண்டலங் கண்டிகை நாகமுமூதின சங்கு முயர்கட்டிக் கப்பரையேதமில் பாதுகம் யோகாந்த மாதனமேதமில் யோகவட்டந் தண்டமீ ரைந்தே.

உரை

காதுகளில் அணிந்து இருக்கின்ற குண்டலங்கள், கழுத்தில் அணிந்து இருக்கின்ற நாக மணி மாலை, இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த சங்கு, உயர்வான திருநீறு வைத்திருக்கும் பாத்திரம், பிச்சை எடுக்கின்ற பாத்திரமாகிய திருவோடு, குற்றம் இல்லாத பாதணிகள், யோக முத்திரை, அமர்ந்து இருக்கின்ற ஆசனம், குற்றம் இல்லாத யோகக் காப்பு, தண்டம் ஆகிய இந்த இரண்டு ஐந்து, அதாவது பத்து அடையாளங்களுமே, உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    காதுகளில் அணிந்து இருக்கின்ற குண்டலங்களும், கழுத்தில் அணிந்து இருக்கின்ற நாக மணி மாலையும்,

  • வரி 2

    இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த சங்கும், உயர்வான திருநீறு வைத்திருக்கும் பாத்திரமும், பிச்சை எடுக்கின்ற பாத்திரமாகிய திருவோடும்,

  • வரி 3

    குற்றம் இல்லாத பாதணிகளும், யோக முத்திரையும், அமர்ந்து இருக்கின்ற ஆசனமும்,

  • வரி 4

    குற்றம் இல்லாத யோகக் காப்பும், தண்டமும் ஆகிய இந்த இரண்டு ஐந்து, அதாவது பத்து அடையாளங்களுமே உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்.

திருமந்திரம் பாடல் #1664

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout