தொடர்ந்து படிக்கread this section continuously
பூதி யணிவது சாதன மாதியிற்காதணி தாம்பிரங் குண்டலங் கண்டிகையோதி யவர்க்கு முருத்திர சாதனந்தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.
உரைmeaning
உண்மையான தவசிகள் விபூதியை அணிந்து கொள்வது, மிகவும் உன்னதமான கருவியாக அனைத்திற்கும் முதலானது ஆகும். அது மட்டுமின்றி, காதுகளில் அணிகின்ற செப்பினால் செய்த குண்டலங்களும், கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் அவர்களுக்குக் கருவியாகும். மந்திரங்களை ஓதுகின்ற தவசிகளுக்கு அந்த ஓதலை நிறைவேற்றித் தருகின்ற, கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும் கருவியாக உள்ளது. இந்தக் கருவிகளைப் பயன்படுத்துகின்ற முறையை முழுவதும் அறிந்து தெளிந்த, தீமை இல்லாத உண்மையான சிவ யோகத்தைப் புரிகின்ற யோகிகளுக்கு மட்டுமே அவை பயனுள்ளதாகும்.
For true ascetics, the wearing of sacred ash is the most exalted instrument of all and stands first among them. Besides that, the copper earrings worn in the ears and the bead worn at the neck are instruments for them too. For ascetics who chant mantras, the rudraksha garland held in the hand, which carries that chanting through, is an instrument as well. These serve their purpose only for those flawless yogis who practise the true Siva yoga and who have fully learned and grown clear about the way these instruments are used.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான தவசிகள் விபூதியை அணிந்து கொள்வது, மிகவும் உன்னதமான கருவியாக அனைத்திற்கும் முதலானது ஆகும்.
For true ascetics, the wearing of sacred ash is the most exalted instrument of all and stands first among them.
- வரி 2Line 2
அது மட்டுமின்றி, காதுகளில் அணிகின்ற செப்பினால் செய்த குண்டலங்களும், கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் அவர்களுக்குக் கருவியாகும்.
Besides that, the copper earrings worn in the ears and the bead worn at the neck are instruments for them too.
- வரி 3Line 3
மந்திரங்களை ஓதுகின்ற தவசிகளுக்கு அந்த ஓதலை நிறைவேற்றித் தருகின்ற, கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும் கருவியாக உள்ளது.
For ascetics who chant mantras, the rudraksha garland held in the hand, which carries that chanting through, is an instrument as well.
- வரி 4Line 4
இந்தக் கருவிகளைப் பயன்படுத்துகின்ற முறையை முழுவதும் அறிந்து தெளிந்த, தீமை இல்லாத உண்மையான சிவ யோகத்தைப் புரிகின்ற யோகிகளுக்கு மட்டுமே அவை பயனுள்ளதாகும்.
These serve their purpose only for those flawless yogis who practise the true Siva yoga and who have fully learned and grown clear about the way these instruments are used.
திருமந்திரம் பாடல் #1662
1 / 2





