தொடர்ந்து படிக்கread this section continuously
ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
உரைmeaning
இறைவனை அடைய வேண்டும் என்று முறைப்படித் தவம் செய்யாமல் இருக்கின்றார்கள்; ஏனெனில், அதற்கென்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களைப் படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் காட்டிற்குச் சென்று தவம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு, தினந்தோறும் பசிக்கு உணவு வேண்டி நின்று காட்டைச் சுற்றி வருகின்றார்கள். அது எப்படி இருக்கின்றது என்றால், ஆற்றில் அசையாமல் கிடக்கும் முதலையைக் கண்டு பயந்து போய், குட்டிகளை ஈன்ற கரடியின் எதிரில் சென்று அகப்பட்டுக்கொண்டதை ஒத்திருக்கின்றது.
They do not do austerity in the proper way with the aim of reaching God, because they have not read and learned the agamas that were granted for that very purpose. Saying that they are going to the forest to do austerity, they stand each day begging food for their hunger and go round and round the forest. And what this is like is this: seeing a crocodile lying motionless in the river and fleeing from it in fear, only to walk up in front of a bear that has given birth to cubs and be caught by it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆற்றில் அசையாமல் கிடக்கும் முதலையைக் கண்டு பயந்து போய்,
Seeing a crocodile lying motionless in the river and fleeing from it in fear,
- வரி 2Line 2
குட்டிகளை ஈன்ற கரடியின் எதிரில் சென்று அகப்பட்டுக்கொண்டதை ஒத்திருக்கின்றது.
it is like walking up in front of a bear that has given birth to cubs and being caught by it.
- வரி 3Line 3
இறைவனை அடைய வேண்டும் என்று முறைப்படித் தவம் செய்யாமல் இருக்கின்றார்கள்; ஏனெனில், அதற்கென்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களைப் படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
They do not do austerity in the proper way with the aim of reaching God, because they have not read and learned the agamas that were granted for that very purpose.
- வரி 4Line 4
காட்டிற்குச் சென்று தவம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு, தினந்தோறும் பசிக்கு உணவு வேண்டி நின்று காட்டைச் சுற்றி வருகின்றார்கள்.
Saying that they are going to the forest to do austerity, they stand each day begging food for their hunger and go round and round the forest.
திருமந்திரம் பாடல் #1642
1 / 2





