திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1635

ஆறாம் தந்திரம்6. தவ நிந்தை

தொடர்ந்து படிக்கread this section continuously

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

உரை

தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே, ஆதிகாலத்திலிருந்து உண்மையான தவத்தைச் செய்கின்றார்கள். அந்தப் பயனை மற்றவர்களும் பெறுவதற்காக, தாம் அறிந்துகொண்ட தவம் செய்யும் வழிமுறைகளைத் தகுதியானவர்களும் அறிந்துகொள்ளும்படி காட்டிக் கொடுக்கின்றார்கள். இப்படி மற்றவர்களும் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்ததனால், உண்மையான தர்மத்தைச் செய்தவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இவர்களே, விண்ணுலகில் இருக்கும் தேவர்களைவிடவும், மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களைவிடவும் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே, ஆதிகாலத்திலிருந்து உண்மையான தவத்தைச் செய்கின்றார்கள்.

  • வரி 2

    அந்தப் பயனை மற்றவர்களும் பெறுவதற்காக, தாம் அறிந்துகொண்ட தவம் செய்யும் வழிமுறைகளைத் தகுதியானவர்களும் அறிந்துகொள்ளும்படி காட்டிக் கொடுக்கின்றார்கள்.

  • வரி 3

    இப்படி மற்றவர்களும் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்ததனால், உண்மையான தர்மத்தைச் செய்தவர்கள் ஆகின்றார்கள்.

  • வரி 4

    ஆகவே இவர்களே, விண்ணுலகில் இருக்கும் தேவர்களைவிடவும், மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களைவிடவும் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1635

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout