நெறிவழி யேசென்று நேர்மையி லொன்றித்தறியிருந் தாப்போலத் தம்மை யிருத்திச்சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்குறியறி வாளர்குக் கூடலு மாமே.
பாடல் 1457 — உரைVerse 1457 — meaning
இறைவனை அடைவதற்கென்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின் வழியே மனத்தைச் செலுத்தி, அந்த வழிமுறையில் சிறிதும் குறையின்றி முறைப்படி செய்து, அதிலேயே மனத்தை ஒன்றி வைத்து, தரையில் ஊன்றி வைத்த கழி அசையாமல் இருப்பதைப் போலவே தாமும் எதனாலும் அசையாமல் இருந்து, மழை பொழிந்தாலும் காற்று அடித்தாலும் சிறிதும் அசையாத அந்தக் கழியைப் போலவே, தம்மைச் சுற்றி எது நிகழ்ந்தாலும் அதனால் பயம் என்ற உணர்வே சிறிதும் இல்லாமல் இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனைத் தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கே இறைவனோடு ஒன்றாகக் கூடுவது இயலும்.
Directing the mind solely along the path graciously given by the guru for reaching God, following it by rule without the slightest lapse, fixing the mind wholly upon it, and remaining as unmoved by anything as a stake driven firmly into the ground, unmoved even when rain pours or wind beats upon it just as that stake stays unmoved, so that whatever happens around them stirs not the slightest feeling of fear, and holding reaching God as their only goal, only those who have known and grown clear about him within themselves are able to become one with God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்கென்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின் வழியே மனத்தைச் செலுத்தி, அந்த வழிமுறையில் சிறிதும் குறையின்றி முறைப்படி செய்து, அதிலேயே மனத்தை ஒன்றி வைத்து,
Directing the mind solely along the path graciously given by the guru, following it without the slightest lapse and fixing the mind wholly upon it,
- வரி 2Line 2
தரையில் ஊன்றி வைத்த கழி அசையாமல் இருப்பதைப் போலவே தாமும் எதனாலும் அசையாமல் இருந்து,
and remaining unmoved by anything, like a stake driven firmly into the ground,
- வரி 3Line 3
மழை பொழிந்தாலும் காற்று அடித்தாலும் சிறிதும் அசையாத அந்தக் கழியைப் போலவே, தம்மைச் சுற்றி எது நிகழ்ந்தாலும் அதனால் பயம் என்ற உணர்வே சிறிதும் இல்லாமல்,
unmoved even when rain pours or wind beats, so that nothing stirs the slightest feeling of fear,
- வரி 4Line 4
இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனைத் தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கே இறைவனோடு ஒன்றாகக் கூடுவது இயலும்.
only those who so know and grow clear about God within themselves can become one with him.




