தொடர்ந்து படிக்கread this section continuously
விரும்பிநின் றேசெய்யில் மெய்த்த வராகும்விரும்பிநின் றேசெய்யில் மெய்யுணர் வாகும்விரும்பிநின் றேசெய்யில் மெய்த்த வமாகும்விரும்பிநின் றேசெய்யில் விண்ணவ னாகுமே.
உரைmeaning
பாடல் #1461-இல் உள்ளபடி எழுத்துக்களும் பாடல்களும் அவை அடங்கிய அறுபத்து நான்கு கலைகளும் ஆகிய எதைச் செய்தாலும், இறைவனை அடையவேண்டும் என்ற விருப்பத்தில் அசையாத மனதுடன் நின்று செய்பவர்களே உண்மையான தவம் புரிபவர்கள் ஆவார்கள். அந்தச் செயலால் கிடைப்பதே மாயை நீங்கிய உண்மையான உணர்வு நிலை ஆகும். அவ்வாறு அசையாத மனதுடன் செய்வதே உண்மையான தவ முறை. அந்தத் தவத்தை முறையாகச் செய்பவர்கள் விண்ணுலகத் தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
As in verse 1461, whatever one does among letters, songs, or the sixty-four arts that hold them, only those who do it standing firm and unmoved in the wish to reach God are truly performing austerity. What is gained by that act is the true state of awareness free of maya. To do it so, with an unmoving mind, is the true manner of austerity. Those who perform that austerity by rule become themselves the celestials of the heavenly world.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1461-இல் உள்ளபடி, எழுத்துக்களும் பாடல்களும் அவை அடங்கிய அறுபத்து நான்கு கலைகளும் ஆகிய எதைச் செய்தாலும், இறைவனை அடையவேண்டும் என்ற விருப்பத்தில் அசையாத மனதுடன் நின்று செய்பவர்களே உண்மையான தவம் புரிபவர்கள் ஆவார்கள்;
As in verse 1461, whatever is done standing firm and unmoved in the wish to reach God becomes true;
- வரி 2Line 2
அவ்வாறு விரும்பி நின்று செய்தால், அந்தச் செயலால் கிடைப்பதே மாயை நீங்கிய உண்மையான உணர்வு நிலை ஆகும்;
done so, it becomes true realization, the state of awareness free of maya;
- வரி 3Line 3
அவ்வாறு விரும்பி நின்று அசையாத மனதுடன் செய்வதே உண்மையான தவ முறை ஆகும்;
done so, it becomes true austerity;
- வரி 4Line 4
அவ்வாறு விரும்பி நின்று அந்தத் தவத்தை முறையாகச் செய்பவர்கள் விண்ணுலகத் தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
and one who performs that austerity by rule becomes a celestial of heaven.
திருமந்திரம் பாடல் #1462





