தொடர்ந்து படிக்கread this section continuously
பேணிப் பிறவா வுலகருள் செய்திடுங்காணிற் றனது கலவியு ளேநிற்குநாணில் நரக நெறிக்கே வழிசெய்யுமூனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.
உரைmeaning
யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்தால், இனிப் பிறவி எடுக்காத நிலையை இந்த உலகத்திலேயே இறையருள் கொடுத்துவிடும். அந்த இறை சக்தியைத் தமக்குள் தரிசித்தால், தம்முடைய ஆன்மாவோடு ஒன்றாகக் கலந்து உள்ளே வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்துகொள்ளலாம். அப்படி இறையோடு கலந்திருக்கும் நிலையில் இருப்பதற்கு வெட்கப்பட்டு விலகி நின்றால், மனம் ஐம்புலன்களின் வழியே ஆசைகளின் பின்னால் செல்லும் தவறான வழியையே கொடுக்கும். இறையோடு கலந்திருக்கும் நிலையிலேயே வெட்கப்படாமல் தொடர்ந்திருந்தால், உடலுக்குள் இருக்கும் மலங்களைச் சுட்டெரிக்கும் அங்கியாக இருக்கும் உத்தமனாகிய இறைவனாகவே தாமும் ஆகிவிடுவார்கள்.
If one follows yoga by rule, without a break, with an unmoving mind, then even in this very world divine grace will grant the state of never taking birth again. If one beholds that divine power within, one may come to know it as the power that dwells mingled together with one's own soul. If one grows ashamed of remaining in that state of being mingled with God and turns away, the mind will only take the wrong path, following after desire through the five senses. But if one remains steadily, without shame, in that very state of being mingled with God, one becomes God himself, the noble one who is the fire that burns away the impurities dwelling within the body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்தால், இனிப் பிறவி எடுக்காத நிலையை இந்த உலகத்திலேயே இறையருள் கொடுத்துவிடும்;
Steady, unbroken yoga brings, even in this very world, the state of never being born again;
- வரி 2Line 2
அந்த இறை சக்தியைத் தமக்குள் தரிசித்தால், தம்முடைய ஆன்மாவோடு ஒன்றாகக் கலந்து உள்ளே வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்துகொள்ளலாம்;
beholding that divine power within, one knows it as mingled together with one's own soul;
- வரி 3Line 3
இறையோடு கலந்திருக்கும் அந்த நிலையில் இருப்பதற்கு வெட்கப்பட்டு விலகி நின்றால், மனம் ஐம்புலன்களின் வழியே ஆசைகளின் பின்னால் செல்லும் தவறான வழியையே கொடுக்கும்;
turning away in shame from that state only opens the wrong path, the mind following desire through the five senses;
- வரி 4Line 4
ஆனால் வெட்கப்படாமல் அந்த நிலையிலேயே தொடர்ந்திருந்தால், உடலுக்குள் இருக்கும் மலங்களைச் சுட்டெரிக்கும் அங்கியாக இருக்கும் உத்தமனாகிய இறைவனாகவே தாமும் ஆகிவிடுவார்கள்.
but remaining unashamed in it, one becomes the noble one, the fire that burns away the body's impurities.
திருமந்திரம் பாடல் #1463





