திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1464

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒத்தசெங் கோலா ருலப்பிலி மாதவரெத்தனை யாயிரம் வீழ்ந்ததென் றெண்ணிலீர்சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாயத்த னிவனென்றே யன்புறு வார்களே.

உரை

ஒன்றாக நிமிர்ந்திருக்கும் செம்மையான கோலைப் போல வீற்றிருந்து அழிவற்ற மாபெரும் தவத்தை மேற்கொண்டவர்களில், எத்தனையோ ஆயிரம் பேர் அதைத் தொடராமல் விட்டுவிட்டதால் வீழ்ந்துபோனவர்கள் எண்ணிக்கையில்லாமல் இருக்கிறார்கள். அவ்வாறு விட்டுவிடாமல் தொடர்ந்து மாபெரும் தவத்தை மேற்கொள்பவர்களைச் சித்தர்களும் தேவர்களும் மும்மூர்த்திகளும் பெருமையுடன் "எங்களின் அப்பனான இறைவன் இவனே" என்று கூறி அவரோடு அன்பு கொண்டிருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒன்றாக நிமிர்ந்திருக்கும் செம்மையான கோலைப் போல வீற்றிருந்து அழிவற்ற மாபெரும் தவத்தை மேற்கொண்டவர்களில்,

  • வரி 2

    எத்தனையோ ஆயிரம் பேர் அதைத் தொடராமல் விட்டுவிட்டதால் வீழ்ந்துபோனவர்கள் எண்ணிக்கையில்லாமல் இருக்கிறார்கள்;

  • வரி 3

    ஆனால் விட்டுவிடாமல் தொடர்ந்து அந்த மாபெரும் தவத்தை மேற்கொள்பவர்களைச் சித்தர்களும் தேவர்களும் மும்மூர்த்திகளும் பெருமையுடன்,

  • வரி 4

    "எங்களின் அப்பனான இறைவன் இவனே" என்று கூறி அவரோடு அன்பு கொண்டிருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1464

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout