திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1465

தொடர்ந்து படிக்கread this section continuously

யோகிக்கும் யோகாதி மூன்றுள தொன்றுற்றோராகத் தகுகிரி யாதி சரிதாதியாகத்தை விட்ட சரிதை யொன்றொன்றுளவாகித்தன் பத்தியு ளன்புவைத் தேனே.

உரை

யோகத்தைப் புரியும் யோகிக்கும் யோக நெறிக்கும் மூலமாக இருக்கும் மூன்று வழிமுறைகள் உள்ளன. இவற்றுள் ஒன்றி யோக முறையைக் கடைபிடிக்கும் யோகியர், யோகியாக ஆவதற்குத் தகுந்த கிரியைகளும் அவற்றின் மூல முறைகளும், சரியைகளும் அவற்றின் மூல முறைகளும், யாகம் செய்வதைத் தவிர மற்ற அனைத்துச் செயல்களும் அடங்கிய சரியை முறைகளும் என ஒவ்வொன்றாக உள்ள மூன்று வகை முறைகளையும் தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக்கொண்டு, அதன் வழியே புரியும் யோகத்தில் தாம் கொண்ட பக்திக்குள்ளேயே இறைவன் மேல் உண்மையான அன்பை வைத்திருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    யோகத்தைப் புரியும் யோகிக்கும் யோக நெறிக்கும் மூலமாக இருக்கும் மூன்று வழிமுறைகள் உள்ளன; இவற்றுள் ஒன்றி யோக முறையைக் கடைபிடிக்கும் யோகியர்,

  • வரி 2

    யோகியாக ஆவதற்குத் தகுந்த கிரியைகளும் அவற்றின் மூல முறைகளும், சரியைகளும் அவற்றின் மூல முறைகளும்,

  • வரி 3

    யாகம் செய்வதைத் தவிர மற்ற அனைத்துச் செயல்களும் அடங்கிய சரியை முறைகளும் என ஒவ்வொன்றாக உள்ள மூன்று வகை முறைகளையும் தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக்கொண்டு,

  • வரி 4

    அதன் வழியே புரியும் யோகத்தில் தாம் கொண்ட பக்திக்குள்ளேயே இறைவன் மேல் உண்மையான அன்பை வைத்திருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1465

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout