தொடர்ந்து படிக்கread this section continuously
யோகச் சமையமே யோகம் பலவுன்னல்யோக விசேடமே யட்டாங்க யோகமாம்யோக நிர்வாணமே யுற்ற பரோதையம்யோக பிடேகமே யொண்சத்தி யுற்றலே.
உரைmeaning
யோகத்தில் சமயம் எனப்படும் சரியை என்பது, யோகத்தில் உள்ள பலவிதமான நெறிமுறைகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றைத் தவறாமல் கடைபிடிப்பதாகும். யோகத்தில் விசேடம் எனப்படும் கிரியை என்பது எட்டு அங்கங்களைக் கொண்ட அட்டாங்க யோகமாகும். யோகத்தில் நிர்வாணம் எனப்படும் யோகம் என்பது, தமக்குக் கிடைக்கும் அசையாத மனதோடு எண்ணங்களற்ற நிலை தோன்றுவதாகும். யோகத்தில் அபிடேகம் எனப்படும் ஞானம் என்பது, தம்மோடு ஒன்றாகக் கலந்திருக்கும் இறை சக்தியை உணர்வதாகும்.
Sariyai, called samayam within yoga, is taking in the many different disciplines found within yoga and following them without fail. Kiriyai, called viseedam within yoga, is ashtanga yoga, which has eight limbs. Yoga itself, called nirvanam within yoga, is the state, arising along with the unmoving mind that one attains, where thought itself falls away. Jnana, called abhishekam within yoga, is realizing the divine power that lies mingled together with oneself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
யோகத்தில் சமயம் எனப்படும் சரியை என்பது, யோகத்தில் உள்ள பலவிதமான நெறிமுறைகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றைத் தவறாமல் கடைபிடிப்பதாகும்;
Sariyai, called samayam within yoga, is taking in and following without fail the many disciplines found within yoga;
- வரி 2Line 2
யோகத்தில் விசேடம் எனப்படும் கிரியை என்பது எட்டு அங்கங்களைக் கொண்ட அட்டாங்க யோகமாகும்;
kiriyai, called viseedam within yoga, is the eight-limbed ashtanga yoga;
- வரி 3Line 3
யோகத்தில் நிர்வாணம் எனப்படும் யோகம் என்பது, தமக்குக் கிடைக்கும் அசையாத மனதோடு எண்ணங்களற்ற நிலை தோன்றுவதாகும்;
yoga itself, called nirvanam within yoga, is the thought-free state arising with the unmoving mind one attains;
- வரி 4Line 4
யோகத்தில் அபிடேகம் எனப்படும் ஞானம் என்பது, தம்மோடு ஒன்றாகக் கலந்திருக்கும் ஒளிமிக்க இறை சக்தியை உணர்வதாகும்.
jnana, called abhishekam within yoga, is realizing the radiant divine power mingled within oneself.
திருமந்திரம் பாடல் #1466





