ஞானத்தின் மிக்க வறிநெறி நாட்டில்லைஞானத்தின் மிக்க சமையமு நன்றன்றுஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவால்ஞானத்தின் மிக்கார் நரரில்மிக் காரே.
பாடல் 1467 — உரைVerse 1467 — meaning
ஞானத்தை விடச் சிறந்ததாக அறியப்படும் நெறிமுறை என எதுவும் எந்த நாட்டிலும் இல்லை. ஞானத்தை மேலானது என்று ஏற்றுக்கொள்ளாத எந்தச் சமயமும் நன்மையானது இல்லை. ஞானத்தை விட்டுவிட்டு இருக்கும் எந்த வழிமுறையும் நன்மையான முக்தி நிலையைக் கொடுக்காது. ஆதலால், ஞானத்தில் மிகவும் மேன்மை பெற்றவர்களே மனிதர்களில் மிகவும் மேன்மையானவர் ஆவார்கள்.
There is no discipline anywhere, in any land, known to be greater than jnana. No religion that does not accept jnana as supreme is a good one. No method that leaves jnana aside will grant the good state of liberation. Therefore, those who have risen highest in jnana are themselves the highest among human beings.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானத்தை விடச் சிறந்ததாக அறியப்படும் நெறிமுறை என எதுவும் எந்த நாட்டிலும் இல்லை;
There is no discipline anywhere, in any land, known to be greater than jnana;
- வரி 2Line 2
ஞானத்தை மேலானது என்று ஏற்றுக்கொள்ளாத எந்தச் சமயமும் நன்மையானது இல்லை;
no religion that does not accept jnana as supreme is a good one;
- வரி 3Line 3
ஞானத்தை விட்டுவிட்டு இருக்கும் எந்த வழிமுறையும் நன்மையான முக்தி நிலையைக் கொடுக்காது;
no method that leaves jnana aside grants the good state of liberation;
- வரி 4Line 4
ஆதலால், ஞானத்தில் மிகவும் மேன்மை பெற்றவர்களே மனிதர்களில் மிகவும் மேன்மையானவர் ஆவார்கள்.
therefore, those highest in jnana are themselves the highest among human beings.




