தொடர்ந்து படிக்கread this section continuously
இருக்குஞ் சேயிடம் பிரமமு மாகும்வருக்குஞ் சராசர மாகு முலகந்தருக்கிய வாசார மெல்லாந் தகுமேதிருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்கே.
உரைmeaning
இறைவனின் பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு அவர்கள் இருக்கும் இடமே வீடுபேறாக ஆகிவிடும். ஆதியிலிருந்து தொடர்ந்து வரும், அசையும் பொருளும் அசையா பொருளுமாக இருக்கும் இந்த உலகமே அவர்கள் கடைபிடித்துவரும் ஒழுக்கங்கள் அனைத்திற்கும் தகுதியானபடி அமைந்துவிடும். இது யாருக்கு எனில், ஒரு பிழையும் இல்லாத உன்னதமான ஞானத்தைத் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்துகொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்.
For the wise, the children of God, the very place where they dwell becomes liberation itself. This world, continuing from the beginning, made of both moving and unmoving things, becomes suited to every discipline they keep. And this holds only for the wise, those who have searched out and realized within themselves the flawless, exalted wisdom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனின் பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு, அவர்கள் இருக்கும் இடமே வீடுபேறாக ஆகிவிடும்;
For the wise, the children of God, the very place they dwell becomes liberation itself;
- வரி 2Line 2
ஆதியிலிருந்து தொடர்ந்து வரும், அசையும் பொருளும் அசையா பொருளுமாக இருக்கும் இந்த உலகமே,
this world, continuing from the beginning, made of moving and unmoving things,
- வரி 3Line 3
அவர்கள் கடைபிடித்துவரும் ஒழுக்கங்கள் அனைத்திற்கும் தகுதியானபடி அமைந்துவிடும்;
becomes suited to every discipline they keep;
- வரி 4Line 4
இது, ஒரு பிழையும் இல்லாத உன்னதமான ஞானத்தைத் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்துகொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்.
and this holds only for the wise who have searched out and realized flawless wisdom within.
திருமந்திரம் பாடல் #1470





