திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1469

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்பா லுலகுந் தனக்கரு ளாவதுமன்பா லெனக் கருளாவது மாவனென்பார்கள் ஞானமு மெய்துஞ் சிவயோகமுமன்பாலி னேயமும் பெற்றிடுந் தானே.

உரை

தாம் சார்ந்திருக்கும் உலகமும் அதில் நிகழும் அனைத்தும் தமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று எடுத்துக்கொள்வதும், தம் மேல் கொண்ட அன்பினால் தமக்கு இறைவன் கொடுக்கும் அருளாகவே அனைத்தும் நிகழ்கிறது என்பதும், அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கிறான் என்பதும் ஆக, ஞானியர்கள் இவ்வாறு கூறுவார்கள். இந்த ஞானியரே இறையருளால் ஞானமும் பெற்று, சிவத்தை அறியும் யோகமும் பெற்று, இனிமையான பாலைப் போல இறைவனோடு அவர்கள் கொண்ட தூய்மையான அன்பினால் பேரின்பத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தாம் சார்ந்திருக்கும் உலகமும் அதில் நிகழும் அனைத்தும் தமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்;

  • வரி 2

    தம் மேல் கொண்ட அன்பினால் தமக்கு இறைவன் கொடுக்கும் அருளாகவே அனைத்தும் நிகழ்கிறது, அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கிறான்,

  • வரி 3

    என்று ஞானியர்கள் கூறுவார்கள்; இந்த ஞானியரே இறையருளால் ஞானமும் பெற்று, சிவத்தை அறியும் யோகமும் பெற்று,

  • வரி 4

    இனிமையான பாலைப் போல இறைவனோடு அவர்கள் கொண்ட தூய்மையான அன்பினால் பேரின்பத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1469

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout