திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1468

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தமுஞ் சத்த மன்னுந் தகுமனதுமுய்த்த வுணர்வு முணர்ந்துங் கரந்தையுஞ்சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்கமே.

உரை

ஞானத்தைப் பெறச் செய்யும் மூலச் சத்தமும், அந்தச் சத்தம் நிலைபெறுவதற்குத் தகுதியான மனமும், அந்த மனத்தால் கிடைக்கப்பெறும் உண்மை உணர்வும், அதை உணர்ந்துகொண்டதற்குக் காரணமாக இருப்பவர் என்று தெரிந்துகொண்ட குருவும், சித்தம் என்று அழைக்கப்படும் இம்மூன்றையும் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கும் செயலும் ஆகிய இவை அனைத்தும் சத்தங்களைக் கடந்து அதன் எல்லையாக இருக்கும் இறைவனை அறிந்துகொண்ட ஞானியர் பெற்ற உண்மை வழியாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஞானத்தைப் பெறச் செய்யும் மூலச் சத்தமும், அந்தச் சத்தம் நிலைபெறுவதற்குத் தகுதியான மனமும்,

  • வரி 2

    அந்த மனத்தால் கிடைக்கப்பெறும் உண்மை உணர்வும், அதை உணர்ந்துகொண்டதற்குக் காரணமாக இருப்பவர் என்று தெரிந்துகொண்ட குருவும்,

  • வரி 3

    சித்தம் என்று அழைக்கப்படும் இம்மூன்றையும் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கும் செயலும்,

  • வரி 4

    ஆகிய இவை அனைத்தும் சேர்ந்ததே, சத்தங்களைக் கடந்து அதன் எல்லையாக இருக்கும் இறைவனை அறிந்துகொண்ட ஞானியர் பெற்ற உண்மை வழியாகும்.

திருமந்திரம் பாடல் #1468

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout