தொடர்ந்து படிக்கread this section continuously
ஞான சமையமே நாடுந்தனைக் காண்டல்ஞான விசேடமே நாடும் பரோதையம்ஞான நிர்வாணமே நன்னெறி வன்னருள்ஞானா பிடேகமே நற்குரு பாதமே.
உரைmeaning
ஞானமானது சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது, வெளியில் தேடிச் செல்கின்ற இறைவனைத் தனக்குள்ளேயே கண்டு உணர்வது ஆகும். ஞானமானது விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது, தாம் தேடுகின்ற பரம்பொருளாகிய இறைவன் தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும். ஞானமானது நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது, நன்மையைக் கொடுக்கின்ற நெறிகளாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெறுவது ஆகும். ஞானமானது அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது, நன்மையே வடிவாகக் குருநாதனாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளே ஆகும்.
Wisdom's being complete in Sariyai, called religion, is coming to see and realize within oneself the God whom one seeks outside. Wisdom's being complete in Kriyai, called the distinguished, is the Supreme God one seeks taking form as wisdom within oneself. Wisdom's being complete in Yoga, called liberation, is fully receiving the grace of God, who stands as the paths that grant every good. Wisdom's being complete in Jnana itself, called anointing, is nothing other than the sacred feet of God, who stands as the Guru, goodness itself in form.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானமானது சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது, வெளியில் தேடிச் செல்கின்ற இறைவனைத் தமக்குள்ளேயே கண்டு உணர்வது ஆகும்.
Wisdom's being complete in Sariyai, called religion, is coming to see and realize within oneself the God whom one seeks outside.
- வரி 2Line 2
ஞானமானது விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது, தாம் தேடுகின்ற பரம்பொருளாகிய இறைவன் தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும்.
Wisdom's being complete in Kriyai, called the distinguished, is the Supreme God one seeks taking form as wisdom within oneself.
- வரி 3Line 3
ஞானமானது நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது, நன்மையைக் கொடுக்கின்ற நெறிகளாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெறுவது ஆகும்.
Wisdom's being complete in Yoga, called liberation, is fully receiving the grace of God, who stands as the paths that grant every good.
- வரி 4Line 4
ஞானமானது அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது, நன்மையே வடிவாகக் குருநாதனாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளே ஆகும்.
Wisdom's being complete in Jnana itself, called anointing, is nothing other than the sacred feet of God, who stands as the Guru, goodness itself in form.
திருமந்திரம் பாடல் #1476





