திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1477

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சாற்றுஞ் சன்மார்கமாந் தற்சிவ தத்துவந்தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டுசீற்ற மொழிந்து சிவயோக சித்தராய்க்கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

உரை

எடுத்துச் சொல்லப்படுகின்ற உண்மையான வழியாக இருப்பது, தாமே சிவமாக இருக்கின்ற தத்துவம் ஆகும். பல வகையாகக் காணுகின்ற அனைத்துத் தோற்றங்களாக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமுமாக இருக்கின்ற இறை தத்துவத்தைத் தமக்குள்ளே கண்டு உணர்ந்து, அதன் பயனால் சீற்றம் அனைத்தும் அழிந்துபோய், சிவயோகத்தையே சித்தமாகக் கொண்டு இருப்பவர்களாகி, இறப்பு என்கின்ற ஒன்றை வென்றுவிட்டவர்களே இந்தச் சன் மார்க்கம் என்று சொல்லப்படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    எடுத்துச் சொல்லப்படுகின்ற உண்மையான வழியாக இருப்பது, தாமே சிவமாக இருக்கின்ற தத்துவம் ஆகும்.

  • வரி 2

    பல வகையாகக் காணுகின்ற அனைத்துத் தோற்றங்களாக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமுமாக இருக்கின்ற இறை தத்துவத்தைத் தமக்குள்ளே கண்டு உணர்ந்து,

  • வரி 3

    அதன் பயனால் சீற்றம் அனைத்தும் அழிந்துபோய், சிவயோகத்தையே சித்தமாகக் கொண்டு இருப்பவர்களாகி,

  • வரி 4

    இறப்பு என்கின்ற ஒன்றை வென்றுவிட்டவர்களே இந்தச் சன் மார்க்கம் என்று சொல்லப்படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1477

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout