தொடர்ந்து படிக்கread this section continuously
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தியுய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டுதெய்வச் சிவநெறி சன்மார்கஞ் சேர்ந்துய்யவையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.
உரைmeaning
சைவம் எனும் வழிமுறைக்குப் பெருமையளிக்கும் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதராகவும் நிற்கின்ற இறைவனுக்கு, ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய குரு வழிமுறை ஒன்று இருக்கின்றது. அதுவே தெய்வ அம்சமாகிய சிவத்தை அடைகின்ற வழிமுறை ஆகும். அதனுடன் உண்மை வழியாகிய, தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற தத்துவமும் சேர்ந்து, மேல் நிலையை அடைவதற்காக உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து வைத்து அருளுகின்றான், குருநாதனாக நிற்கின்ற இறைவன்.
God, who stands as the sole great chief who gives glory to the path called Saivism and as the very Guru, has given, graciously, one Guru-path suited to each soul's own ripeness, so that souls may rise to the higher state. That itself is the path to reaching Sivam, the portion that is divine. Joined with it is the true path, the principle that oneself and what one perceives are both that very God, and, for the sake of rising to the higher state, God who stands as the Guru graciously gives all this to every living being in the world according to each one's own ripeness.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சைவம் எனும் வழிமுறைக்குப் பெருமையளிக்கும் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதராகவும் நிற்கின்ற இறைவன்,
God, who stands as the sole great chief who gives glory to the path called Saivism and as the very Guru,
- வரி 2Line 2
ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய குரு வழிமுறை ஒன்று இருக்கின்றது.
has given, graciously, one Guru-path suited to each soul's own ripeness, so that souls may rise to the higher state.
- வரி 3Line 3
அதுவே தெய்வ அம்சமாகிய சிவத்தை அடைகின்ற வழிமுறை ஆகும்; அதனுடன், தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற உண்மை வழியின் தத்துவமும் சேர்ந்து, மேல் நிலையை அடைவதற்காக,
That itself is the path to reaching Sivam, the portion that is divine, joined with the true path, the principle that oneself and what one perceives are both that very God, for the sake of rising to the higher state,
- வரி 4Line 4
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி, குருநாதனாக நிற்கின்ற இறைவன் கொடுத்து வைத்து அருளுகின்றான்.
and God who stands as the Guru graciously gives all this to every living being in the world according to each one's own ripeness.
திருமந்திரம் பாடல் #1478





