திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1479

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்குருபத்தி செய்யுங் குவலையத் தோர்க்குத்தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்கந் தானே.

உரை

குருவை இறைவனாகவே தரிசிப்பதும், அவரைப் பூசிப்பதும், குருவின் திருவுருவத்தைத் தியானத்தில் சிந்தனை செய்வதும், குருவின் அருகாமையை அனுபவிப்பதும், அவரது புகழைப் போற்றிப் பாடுவதும், அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளைத் தமது தலைமேல் சூடுவதும் ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்குப் பக்தியை முறைப்படி செய்கின்ற உலகத்தவர்களுக்கு, அதன் பயனால் தருகின்ற முக்தி நிலைக்குச் சார்பாக இருந்து அனுபவிக்க வைப்பதே உண்மையான வழியாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    குருவை இறைவனாகவே தரிசிப்பதும், அவரைப் பூசிப்பதும், குருவின் திருவுருவத்தைத் தியானத்தில் சிந்தனை செய்வதும்,

  • வரி 2

    குருவின் அருகாமையை அனுபவிப்பதும், அவரது புகழைப் போற்றிப் பாடுவதும், அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளைத் தமது தலைமேல் சூடுவதும்,

  • வரி 3

    ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்குப் பக்தியை முறைப்படி செய்கின்ற உலகத்தவர்களுக்கு,

  • வரி 4

    அதன் பயனால் தருகின்ற முக்தி நிலைக்குச் சார்பாக இருந்து அனுபவிக்க வைப்பதே உண்மையான வழியாகும்.

திருமந்திரம் பாடல் #1479

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout