திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1480

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தெளிவறி யாதார் சிவனை யறியார்தெளிவறி யாதார் சீவனு மாகார்தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்தெளிவறி யாதவர் தீராப் பிறப்பே.

உரை

குருவின் அருளால் ஞானத் தெளிவை அறியாதவர்கள் சிவப் பரம்பொருளை அறிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் தமது ஆத்ம ஞானத்தில் முழுமை அடைய மாட்டார்கள். அவர்கள் சிவமாக ஆக மாட்டார்கள். அவர்களுக்கு எப்போதும் தீர்ந்துவிடாமல் பிறவிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    குருவின் அருளால் ஞானத் தெளிவை அறியாதவர்கள் சிவப் பரம்பொருளை அறிந்துகொள்ள மாட்டார்கள்.

  • வரி 2

    அவர்கள் தமது ஆத்ம ஞானத்தில் முழுமை அடைய மாட்டார்கள்.

  • வரி 3

    அவர்கள் சிவமாக ஆக மாட்டார்கள்.

  • வரி 4

    அவர்களுக்கு எப்போதும் தீர்ந்துவிடாமல் பிறவிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

திருமந்திரம் பாடல் #1480

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout