திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1481

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்றுமோனம தாமொழிப் பான்முத்த ராவதுமீனமில் ஞானா னுபூதியி லின்பமுந்தானவ னாயறற லானசன் மார்கமே.

உரை

குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாமே சிவமாகவே ஆகுவதும், தம்மிடம் இருக்கின்ற ஐந்து வகையான மலங்களையும் அழிப்பதும், மௌனம் என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில் எண்ணங்கள் அனைத்தையும் அழித்து முக்தி நிலை பெற்றவராக ஆகுவதும், ஒரு குறையும் இல்லாத பேரறிவு ஞானத்தைத் தமது அனுபவத்தில் உணர்ந்து அதில் பேரின்பம் பெறுவதும், தாமே சிவமாக ஆகி தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும் ஆகிய இவை அனைத்துமே உண்மையான வழிகளாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாமே சிவமாகவே ஆகுவதும், தம்மிடம் இருக்கின்ற ஐந்து வகையான மலங்களையும் அழிப்பதும்,

  • வரி 2

    மௌனம் என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில் எண்ணங்கள் அனைத்தையும் அழித்து முக்தி நிலை பெற்றவராக ஆகுவதும்,

  • வரி 3

    ஒரு குறையும் இல்லாத பேரறிவு ஞானத்தைத் தமது அனுபவத்தில் உணர்ந்து அதில் பேரின்பம் பெறுவதும்,

  • வரி 4

    தாமே சிவமாக ஆகி தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும் ஆகிய இவை அனைத்துமே உண்மையான வழிகளாகும்.

திருமந்திரம் பாடல் #1481

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout