தொடர்ந்து படிக்கread this section continuously
சன்மார்கத் தார்க்கு முகத்தோடு பீடமுஞ்சன்மார்கத் தார்க்கு மிடத்தோடு தெய்வமுஞ்சன்மார்கத் தார்க்கும் வருக்கந் தெரிசனமெய்மார்கத் தார்க்கு மியம்புவன் கேண்மினே.
உரைmeaning
இப்பாடல், உண்மையான வழியைப் பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின் முகமே இறைவன் அமர்ந்திருக்கின்ற பீடமாகவும், அவர்கள் இருக்கின்ற இடமே இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாகவும், அவர்களின் கூட்டத்தைக் காண்பதே இறைவனின் தரிசனமாகவும் இருக்கின்றது எனக் கூறுகிறது. தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுகின்ற வழியைத் தேடுகின்ற அனைவருக்கும் இதுவே வழி என்று விளம்பர் வலியுறுத்திக் கூறுகிறது.
This verse declares that the face of those who follow the true path and stand, in the state of liberation, as Sivam himself, is itself the pedestal on which God sits, that the very place where they dwell is itself the temple where God is enthroned, and that beholding their company is itself the vision of God. It declares, urging it upon all who seek the way to know the truth that oneself and what one perceives are both Sivam, that this alone is the path.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான வழியைப் பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின் முகமே இறைவன் அமர்ந்திருக்கின்ற பீடமாக இருக்கின்றது என இப்பாடல் கூறுகிறது.
This verse declares that the face of those who follow the true path and stand, in the state of liberation, as Sivam himself, is itself the pedestal on which God sits,
- வரி 2Line 2
அவர்கள் இருக்கின்ற இடமே இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாக இருக்கின்றது.
that the very place where they dwell is itself the temple where God is enthroned,
- வரி 3Line 3
அவர்களின் கூட்டத்தைக் காண்பதே இறைவனின் தரிசனமாக இருக்கின்றது.
and that beholding their company is itself the vision of God.
- வரி 4Line 4
தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுகின்ற வழியைத் தேடுகின்ற அனைவருக்கும் இதுவே வழி என்று இப்பாடல் வலியுறுத்திக் கூறுகிறது.
It declares, urging it upon all who seek the way to know the truth that oneself and what one perceives are both Sivam, that this alone is the path.
திருமந்திரம் பாடல் #1482





