திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1483

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சன்மார்கச் சாதனந் தான்ஞான ஞேயமாம்பின்மார்கச் சாதனம் பேதையர்க் காய்நிற்குந்துன்மார்கம் விட்ட துரியத் துரிசற்றார்சன்மார்கந் தானவ னாகுஞ்சன் மார்கமே.

உரை

உண்மையான வழிக்கு உதவுகின்ற கருவியாக இருப்பது, ஞானத்தின் மூலம் அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்துகொள்ளுவது ஆகும். மற்ற வழிகளுக்குக் கருவியாக இருக்கின்ற அனைத்தும் அறியாமையில் இருப்பவர்களுக்குப் பெற முடியாததாகவே நிற்கின்றது. தீய வழிகளை நீக்கிவிட்ட ஆழ்நிலைத் தியான நிலையில் அழுக்குகள் எதுவும் இல்லாதவர்களாகப் பேரின்பத்தில் இருப்பதுவே, உண்மையான வழிமுறையில் தாமே சிவம் ஆகுகின்ற சன் மார்க்க வழியாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான வழிக்கு உதவுகின்ற கருவியாக இருப்பது, ஞானத்தின் மூலம் அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்துகொள்ளுவது ஆகும்.

  • வரி 2

    மற்ற வழிகளுக்குக் கருவியாக இருக்கின்ற அனைத்தும் அறியாமையில் இருப்பவர்களுக்குப் பெற முடியாததாகவே நிற்கின்றது.

  • வரி 3

    தீய வழிகளை நீக்கிவிட்ட ஆழ்நிலைத் தியான நிலையில் அழுக்குகள் எதுவும் இல்லாதவர்களாக இருந்து,

  • வரி 4

    பேரின்பத்தில் இருப்பதுவே, உண்மையான வழிமுறையில் தாமே சிவம் ஆகுகின்ற சன் மார்க்க வழியாகும்.

திருமந்திரம் பாடல் #1483

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout