திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1475

தொடர்ந்து படிக்கread this section continuously

நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோர்கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோர்திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

உரை

தமக்குக் கிடைக்கப் பெற்ற ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற ஞானத்தை அடைந்தவர்கள், புண்ணியம் பாவம் என்கின்ற நிலைகளைக் கடந்து நின்று எந்த விதமான பற்றுகளும் இல்லாமல் இருப்பவர்கள். மேன்மையான அன்பிற்கு எல்லையாக இருக்கின்ற இறை ஞானத்தைக் கண்டு அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள். இவர்களே உறுதியாக எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாகவும் சிவ நிலையில் முக்தியாகவும் இருக்கின்ற சித்தர்கள் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தமக்குக் கிடைக்கப் பெற்ற ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற ஞானத்தை அடைந்தவர்கள்,

  • வரி 2

    புண்ணியம் பாவம் என்கின்ற நிலைகளைக் கடந்து நின்று எந்த விதமான பற்றுகளும் இல்லாமல் இருப்பவர்கள்;

  • வரி 3

    மேன்மையான அன்பிற்கு எல்லையாக இருக்கின்ற இறை ஞானத்தைக் கண்டு அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள்;

  • வரி 4

    இவர்களே உறுதியாக எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாகவும் சிவ நிலையில் முக்தியாகவும் இருக்கின்ற சித்தர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1475

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout