திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1474

தொடர்ந்து படிக்கread this section continuously

ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்குஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்ஞானத்தில் யோகமே நாதாந்தம் நல்லொளிஞானக் கிரிகையே நன்முத்தி நாடலே.

உரை

பாடல் #1473-இல் உள்ளபடி, ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு அடிப்படையான நான்கு வகை நிலைகளாக ஞானிக்கு இருப்பவற்றுள், ஞானத்தில் முழுமை பெற்ற ஞானம் என்பது, நான், இது எனது என்கிற எந்த எண்ணமும் இல்லாமல், அனைத்தும் இறைவனே என்று இருக்கும் நிலையாகும். யோகத்தில் முழுமை பெற்ற ஞானம் என்பது, சத்தத்திற்கு எல்லையாக இருக்கும் நன்மையே வடிவான ஜோதியாகும். கிரியையில் முழுமை பெற்ற ஞானம் என்பது, நன்மை தரும் முக்தியைத் தேடிச் செல்வதாகும். சரியையில் முழுமை பெற்ற ஞானம் என்பது, இறைவனை நாடிச் சென்று அடைவதாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1473-இல் உள்ளபடி, ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு அடிப்படையான நான்கு வகை நிலைகள் ஞானிக்கு உள்ளன;

  • வரி 2

    ஞானத்தில் முழுமை பெற்ற ஞானம் என்பது, நான், இது எனது என்கிற எந்த எண்ணமும் இல்லாமல், அனைத்தும் இறைவனே என்று இருக்கும் நிலையாகும்;

  • வரி 3

    யோகத்தில் முழுமை பெற்ற ஞானம் என்பது, சத்தத்திற்கு எல்லையாக இருக்கும் நன்மையே வடிவான ஜோதியாகும்;

  • வரி 4

    கிரியையில் முழுமை பெற்ற ஞானம் என்பது நன்மை தரும் முக்தியைத் தேடிச் செல்வதாகும்; சரியையில் முழுமை பெற்ற ஞானம் என்பது இறைவனை நாடிச் சென்று அடைவதாகும்.

திருமந்திரம் பாடல் #1474

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout