தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாமோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்துமேனிற்ற லாஞ்சத்தி வித்து விளைந்திடுந்தானிக் குலத்தோர் சரிதை கிரிகையே.
உரைmeaning
உண்மையான ஞானத்தைப் பெற்ற ஞானிக்கு, அவரோடு சேர்ந்திருக்கும் குணங்களாக, சரியையில் முழுமை பெற்ற ஞானமும், கிரியையில் முழுமை பெற்ற ஞானமும், யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும், ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஆகிய நான்கு வகை நிலைகள் உள்ளன. இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்குச் சென்றுவிட்ட ஞானிக்கு, இந்த நான்கு நிலைகளில் ஒன்றுகூடக் குணமாகச் சேர்ந்திருப்பதற்கு முந்தைய காலத்தில், அவர் உலகப் பற்றுக்களில் மயங்கியிருந்தபோதே அவருக்கு மேல் நின்று அருளும் இறை சக்தி, பாடல் #1471-இல் உள்ளபடி அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல ஞானம் விளையச் செய்துவிடும். அதன் பயனாக மௌன நிலை என்ற உச்சத்திற்குச் சென்று நான்கு வகை ஞான நிலைகளையும் தம் குணங்களாகக் கொண்ட இந்த ஞானியர் அனைவரும், இனி இறைவனை அடையவேண்டும் என்று சரியையும் கிரியையும் செய்யும் அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களைக் கொடுக்கும் இறை நிலையாக இருப்பார்கள்.
The wise man who has attained true wisdom has, as qualities belonging to him, four kinds of states: wisdom perfected in sariyai, wisdom perfected in kiriyai, wisdom perfected in yoga, and wisdom perfected in jnana itself. Before the wise man who has attained these states and gone on to the state of silence ever had even one of these four states as his own quality, at a time when he was still lost in worldly attachments, the divine power that stood above him and granted grace made wisdom grow within him like a seed, through the fruit of the paths he followed, as told in verse 1471. Through that, having gone to the summit called the state of silence and holding all four kinds of wisdom-states as their own qualities, all these wise men become the divine state that grants its fruits to every soul that practices sariyai and kiriyai in order to reach God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான ஞானத்தைப் பெற்ற ஞானிக்கு, அவரோடு சேர்ந்திருக்கும் குணங்களாக, சரியையில் முழுமை பெற்ற ஞானமும், கிரியையில் முழுமை பெற்ற ஞானமும், யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும், ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஆகிய நான்கு வகை நிலைகள் உள்ளன;
The wise man who has attained true wisdom has four kinds of states as qualities belonging to him: wisdom perfected in sariyai, in kiriyai, in yoga and in jnana itself;
- வரி 2Line 2
இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்குச் சென்றுவிட்ட ஞானிக்கு, இந்த நான்கு நிலைகளில் ஒன்றுகூடக் குணமாகச் சேர்ந்திருப்பதற்கு முந்தைய காலத்தில், அவர் உலகப் பற்றுக்களில் மயங்கியிருந்தபோதே,
before the silent sage ever had even one of these as his own quality, while still lost in worldly attachments,
- வரி 3Line 3
அவருக்கு மேல் நின்று அருளும் இறை சக்தி, பாடல் #1471-இல் உள்ளபடி அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல ஞானம் விளையச் செய்துவிடும்;
the divine power standing above him made wisdom grow within him like a seed, through the paths he had followed, as in verse 1471;
- வரி 4Line 4
அதன் பயனாக மௌன நிலை என்ற உச்சத்திற்குச் சென்று நான்கு வகை ஞான நிலைகளையும் தம் குணங்களாகக் கொண்ட இந்த ஞானியர் அனைவரும், இறைவனை அடையவேண்டும் என்று சரியையும் கிரியையும் செய்யும் அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களைக் கொடுக்கும் இறை நிலையாக இருப்பார்கள்.
and so, at the summit of silence, he becomes the divine state that grants its fruits to every soul practicing sariyai and kiriyai.
திருமந்திரம் பாடல் #1473





