தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுளேனம் விளைந்தெதி ரேகான் வழிதோறுங்கூனல் மதிமண் டலத்தினில் நீர்தண்டுமூனம றுத்துநின் றொண்சுட ராமே.
உரைmeaning
பாடல் #1471-இல் உள்ளபடி இறைவனை அடைவதற்குத் தேவையான வழிமுறையை அறிந்துகொண்டு அதை விடாமல் கடைபிடித்ததால், உண்மையான ஞானம் உருவாகி மேல்நிலைக்கு எழுந்திருக்கும் ஒரு ஞானியின் சிந்தனைக்குள் இன்னமும் இறைவனை அடைவதற்குத் தடையாக இருக்கும் ஆணவம், கன்மம் முதலிய குற்றங்கள் பிறவியின் காரணத்தால் விளைந்து, அவர் எதிர்கொள்ளும் வாழ்க்கையைக் காட்டு வழி போல முழுவதும் கடினமாக வைத்திருக்கும். அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால், அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி, அறிவு ஞானமாக இருக்கும் மண்டலத்தில் அமிழ்த நீரை வைத்திருக்கும் நாடியின் வழியாக அமிழ்தத்தை ஊறச்செய்து, இறைவனை அவர் அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்து மலங்களையும் அதன் மூலம் நீக்கிவிட்டு, நிலைபெற்று நின்று, எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கும் இறைவனின் ஜோதி வடிவமாகவே அவரையும் ஆக்கிவிடும்.
As in verse 1471, once one has known the way needed to reach God and followed it without fail, true wisdom forms and rises within the mind of a wise man to a higher state; yet faults such as arrogance and karma, born of the cause of birth, still stand as obstacles to reaching God within that mind, and keep the life he faces as difficult throughout, like a path through the wild. At that point, through the wisdom he has attained, it transforms his difficult life, causing nectar to well up through the channel that holds nectar-water within the region that is knowledge and wisdom, and thereby removes all the impurities that stand as obstacles to his reaching God, and makes him stand firm and steady, himself becoming the very form of light of God who is forever joined with him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1471-இல் உள்ளபடி இறைவனை அடைவதற்குத் தேவையான வழிமுறையை அறிந்துகொண்டு அதை விடாமல் கடைபிடித்ததால், உண்மையான ஞானம் உருவாகி மேல்நிலைக்கு எழுந்திருக்கும் ஒரு ஞானியின் சிந்தனைக்குள்,
As in verse 1471, true wisdom forms and rises to a higher state within the mind of the wise;
- வரி 2Line 2
இன்னமும் இறைவனை அடைவதற்குத் தடையாக இருக்கும் ஆணவம், கன்மம் முதலிய குற்றங்கள் பிறவியின் காரணத்தால் விளைந்து, அவர் எதிர்கொள்ளும் வாழ்க்கையைக் காட்டு வழி போல முழுவதும் கடினமாக வைத்திருக்கும்;
yet faults such as arrogance and karma, born of the cause of birth, keep his path difficult throughout, like a way through the wild;
- வரி 3Line 3
அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால், அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி, அறிவு ஞானமாக இருக்கும் மண்டலத்தில் அமிழ்த நீரை வைத்திருக்கும் நாடியின் வழியாக அமிழ்தம் ஊறச்செய்யப்பட்டு,
then, through the channel holding the water-column in the crescent moon's region within,
- வரி 4Line 4
இறைவனை அவர் அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்து மலங்களும் அதன் மூலம் நீங்கி, அவர் நிலைபெற்று நின்று, எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கும் இறைவனின் ஜோதி வடிவமாகவே ஆகிவிடுவார்.
the impurities are cleared away, and he stands firm as radiant light, the very form of God.
திருமந்திரம் பாடல் #1472





