திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1459

தொடர்ந்து படிக்கread this section continuously

பூவினிற் கெந்தம் பொருந்திய வாறுபோற்சீவனுக் குள்ளே சிவமணம் பூத்ததுவோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்குநாவி யணைந்த நடுத்தறி யாமே.

உரை

மலராத பூவிற்குள்ளும் நறுமணம் கலந்திருப்பது போலவே ஜீவாத்மாவிற்குள்ளும் சிவம் எனும் பரம்பொருள் கலந்திருக்கிறது. பூ மலர்ந்தபின் அதன் நறுமணம் வெளிப்படுவது போலவே, வரைந்து வைத்த ஓவியம் போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து இந்த முறையைத் தமக்குள் உணர்ந்தறிந்தவர்களுக்கு, கஸ்தூரியோடு சேர்ந்திருக்கும் நறுமணம் போல, தரையில் நடப்பட்ட கழியைப் போல அசையாமல் இருக்கும் யோகியர்களின் பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்திருக்கும் சிவம் வெளிப்படும்.

வரி வாரியாக

  • வரி 1

    மலராத பூவிற்குள்ளும் நறுமணம் கலந்திருப்பது போலவே,

  • வரி 2

    ஜீவாத்மாவிற்குள்ளும் சிவம் எனும் பரம்பொருள் கலந்திருக்கிறது;

  • வரி 3

    பூ மலர்ந்தபின் அதன் நறுமணம் வெளிப்படுவது போலவே, வரைந்து வைத்த ஓவியம் போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து இந்த முறையைத் தமக்குள் உணர்ந்தறிந்தவர்களுக்கு,

  • வரி 4

    தரையில் நடப்பட்ட கழியைப் போல அசையாமல் இருக்கும் அந்த யோகியர்களின் பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்திருக்கும் சிவம், கஸ்தூரியோடு சேர்ந்திருக்கும் நறுமணம் போல வெளிப்படும்.

திருமந்திரம் பாடல் #1459

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout