திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1458

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லதுயூழி தோறூழி யுணரவுந் தானொட்டாராழி யமரு மரியய னென்றுளோரூழி முயன்று மோருச்சியுள் ளானே.

உரை

ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்கும் இறைவனை யோகத்தின் வழியாகச் சென்று தமக்குள் உணர்ந்தவர்களைத் தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்கும் இறைவனைத் தமக்குள் உணர்ந்துகொண்ட யோகியர்கள், அந்த ஊழிக்காலத்தோடு தாமும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலும், அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கிறார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும், அதனால் அழிக்க முடியாத மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் அரனாக இறைவன் இருக்கிறான்.

வரி வாரியாக

  • வரி 1

    ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்கும் இறைவனை, யோகத்தின் வழியாகச் சென்று தமக்குள் உணர்ந்தவர்களைத் தவிர,

  • வரி 2

    வேறு யாராலும் அவனை உணர இயலாது; அவ்வாறு உணர்ந்துகொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள்;

  • வரி 3

    பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலும், அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கிறார்கள்;

  • வரி 4

    ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும், அதனால் அழிக்க முடியாத மாபெரும் உயரத்தில் இருந்து இறைவன் அவர்களைப் பாதுகாக்கிறான்.

திருமந்திரம் பாடல் #1458

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout