திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1460

தொடர்ந்து படிக்கread this section continuously

உய்ந்தன மென்றீ ருறுபொருட் காண்கிலீர்கந்த மலரிற் கரக்கின்ற நந்தியைச்சிந்தை யுறவே தெளிந்திரு ணீக்கினால்முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

உரை

முக்திக்கான ஞானத்தைப் பெற்றுவிட்டோம் என்று சொல்பவர்கள், தமக்குள்ளேயே இருக்கும் பரம்பொருளைக் கண்டு உணராமல் இருக்கிறார்கள். நறுமணம் மலருக்குள் மறைந்திருப்பது போல ஜீவாத்மாவிற்குள் மறைந்திருக்கும் குருநாதனாகிய இறைவனைச் சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து யோகம் செய்து, தமக்குள் அவனை அறிந்து தெளிவு பெற்று, அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை நீக்கினால், முதன்முதலில் இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு மூலகாரணமாக இருக்கும் ஆசைகள் நீங்கிப் பெற்று, இனிப் பிறவியே இல்லாத நிலையை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    முக்திக்கான ஞானத்தைப் பெற்றுவிட்டோம் என்று சொல்பவர்கள், தமக்குள்ளேயே இருக்கும் பரம்பொருளைக் கண்டு உணராமல் இருக்கிறார்கள்;

  • வரி 2

    நறுமணம் மலருக்குள் மறைந்திருப்பது போல, குருநாதனாகிய இறைவன் ஜீவாத்மாவிற்குள் மறைந்திருக்கிறான்;

  • வரி 3

    சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து யோகம் செய்து, தமக்குள் அவனை அறிந்து தெளிவு பெற்று, அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை நீக்கினால்,

  • வரி 4

    முதன்முதலில் இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு மூலகாரணமாக இருக்கும் ஆசைகள் நீங்கி, இனிப் பிறவியே இல்லாத நிலையை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #1460

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout