கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டிவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்குவாணாள் அடைக்கும் வழியுமது வாமே.
மலையார் சிரத்திடை வானீர் அருவிநிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்சிலையார் பொதுவில் திருநட மாடுந்தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளைமூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியைஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்பாலனும் ஆவான் பார்நந்தியின் ஆணையே.
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பிஇடைவாசல் நோக்கி இனிதுள் இருத்திமடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
கலந்த உயிருடன் காலம் அறியில்கலந்த உயிரது காலின் நெருக்கங்கலந்த உயிரது காலது கட்டிற்கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டுவாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்கோய்திற வாவிடிற் கோழையு மாமே.
வாழலு மாம்பல காலும் மனத்திடைப்போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.
முன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்பின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்முன்னூறு கோடி உறுகதி பேசிடில்என்ன மாயம் இடிகரையும் நிற்குமே.
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துபொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்துதெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்தரித்தது தாரணை தற்பரத் தோடே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #588
1 / 10




